வாகன உரிமத்துக்கான எழுத்துத் தேர்வுக்கு இலவச இணையப் பயிற்சி

வாகன உரிமத்துக்கான எழுத்துத் தேர்வுக்கு இலவச இணையப் பயிற்சி

2 mins read
8cfae417-c324-4c15-b2e5-813697b1e0ad
-

சிங்­கப்­பூ­ரில் வாக­ன­மோட்­டும் உரி­மம் பெற விரும்­பு­வோர் சாலை­களில் பயிற்சி செய்­யத் தொடங்­கு­வ­தற்­கு­முன் போக்­கு­வ­ரத்து விதி­மு­றை­கள் தொடர்­பான எழுத்­துத் தேர்­வில் தேர்ச்சி பெறு­வது கட்­டா­யம்.

சிங்­கப்­பூர் போக்­கு­வ­ரத்­துக் காவல்­துறை நடத்­தும் இத்­தேர்­வுக்­கான பயிற்­சியை இணை­யத்­தில் இனி எளி­தாக மேற்­கொள்­ள­லாம். இன்று முதல் இத்­த­கைய பயிற்­சித் தேர்­வு­களை போக்­கு­வரத்­துக் காவல்­துறை இணை­யத்­தில் வெளி­யி­டு­கிறது.

சிங்­பாஸ் கணக்கு வைத்­தி­ருப்­போர் இதனை இல­வ­ச­மா­கப் பயன்­ப­டுத்­த­லாம். சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள், 'ஃபின்' எனப்­படும் வெளி­நாட்­டி­னர் அடை­யாள எண் வைத்­தி­ருப்­போர் ஆகி­யோர் சிங்­பாஸ் கணக்­கு­க­ளுக்கு விண்­ணப்­பிக்­க­லாம்.

இணை­யத்­தில் இந்­தப் பயிற்­சித் தேர்வை ஆங்­கி­லம், மாண்­ட­ரின், மலாய், தமிழ் ஆகிய நான்கு மொழி­களில் எழுத இய­லும்.

சிங்­கப்­பூர் காவல்­படை இணை­யத்­த­ளத்­தின் மின்­னி­லக்­கச் சேவைகள் பக்­கத்­தி­லும் போக்கு­வ­ரத்­துக் காவல்­து­றை­யின் கற்­றல் இணை­ய­வா­ச­லி­லும் இந்­தத் தேர்வை எழு­த­லாம்.

பயிற்­சித் தேர்வு எழு­து­வோர் 50 நிமி­டங்­களில் 50 கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளிக்­கும் வண்­ணம் நேர அடிப்­ப­டை­யி­லான தேர்வை எழு­திப் பழ­க­லாம்.

ஒவ்­வொரு கேள்­விக்­கும் கொடுக்­கப்­பட்­டி­ருக்­கும் பதில்­களில் ஒன்­றைத் தேர்ந்­தெ­டுக்க வேண்­டும்.

தேர்வு நேரம் முடி­வ­தற்கு 10 நிமி­டங்­கள் இருக்­கும்­போது நினை­வூட்­டும் அம்­ச­மும் உண்டு.

பயிற்­சித் தேர்வை மறு­ஆய்வு செய்­ய­வும் தாங்­கள் தவ­றாக விடை­ய­ளித்த கேள்­வி­க­ளுக்கு உரிய சரி­யான பதில்­களை அறிந்து­கொள்­ள­வும் தேர்வு எழு­து­வோர் அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

இத்­தேர்­வு­களை ஒரு­வர் எத்­தனை முறை வேண்­டு­மா­னா­லும் எழு­திப் பயிற்சி பெற­லாம்.

வாக­ன­மோட்­டு­வ­தற்­கான அடிப்­படை எழுத்­துத் தேர்வு, இறு­தித் தேர்வு, மோட்­டார் சைக்­கிள் ஓட்­டு­வ­தற்­கான எழுத்­துத் தேர்வு ஆகி­ய­வற்­றில் தேர்ச்­சி­பெற ஒரு­வர் குறைந்­தது 45 கேள்­வி­களுக்கு சரி­யான பதில் அளிக்க வேண்­டும்.