ஆயுதம் வைத்திருந்த மோட்டார் சைக்கிளோட்டி கைது

ஆயுதம் வைத்திருந்த மோட்டார் சைக்கிளோட்டி கைது

1 mins read
4e2c7194-6778-477d-9003-58d54b1d1aa8
-

கேலாங் வட்­டா­ரத்­தில் போக்­கு­வரத்­துக் காவல்­துறை அதி­கா­ரி­கள் மேற்­கொண்ட சோத­னை­யின்­போது தப்­பி­யோ­டிய 22 வயது ஆட­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

நேற்று முன் தினம் இரவு 11.55 மணி­ய­ள­வில் அந்த வட்­டா­ரத்­தில் அதி­கா­ரி­கள் வாக­னங்­க­ளைச் சோதிக்­கும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டி­ருந்­த­னர்.

அப்­போது வாக­னத்­தைச் சோதிக்க ஒப்­புக்­கொள்­ளாத ஆட­வர், கேலாங் லோரோங் 22 வழி­யா­கத் தப்பி ஓடி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

சந்­தே­கத்­தின் பேரில் அவரை போக்­கு­வ­ரத்­துக் காவல்­துறை அதி­கா­ரி­கள் தடுத்­து­வைத்­த­னர்.

பின்­னர் அவ­ரி­டம் அபா­ய­க­ர­மான ஆயு­தம் இருந்­தது தெரி­ய­வந்­தது.

ஆயு­தம் வைத்­தி­ருந்­தது, போக்­கு­வ­ரத்­துக் குற்­றம் ஆகி­ய­வற்­றுக்­காக அதி­கா­ரி­கள் அந்த ஆட­வ­ரைக் கைது செய்­த­னர்.

அவர் சிகிச்­சைக்­காக மருத்துவ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. காவல்­துறை விசா­ரணை தொடர்­கிறது.

சம்­ப­வம் தொடர்­பில் 'எஸ்ஜி ரோட் விஜி­லாண்டே' ஃபேஸ்புக் பக்­கத்­தில் காணொளி ஒன்று பதி­வி­டப்­பட்­டுள்­ளது. காணொ­ளி­யில் மோட்­டார்சைக்­கிள் ஒன்று சாலை­யில் சறுக்கி விழுந்­த­பின் அதை ஓட்­டிய ஆட­வர் எழுந்து ஓடு­வ­தை­யும் காவல்­து­றை­யி­னர் இரு­வர் மோட்­டார்சைக்­கிள்­களில் விரை­வ­தை­யும் காண முடி­கிறது.

ஆட­வர் தனது மோட்­டார் சைக்­கிளை வெகு வேக­மா­கச் செலுத்­தி­ய­தை­யும் காவல்­து­றை­யி­னர் துரத்­து­வ­தை­யும் பார்த்­த­தாக, சம்­ப­வத்தை நேரில் பார்த்த ஒரு­வர் சீன மொழி நாளே­டான ஷின் மின் டெய்­லி­யி­டம் கூறி­னார்.

பின்­னர் மோட்­டார்சைக்­கிளைக் கைவிட்டு ஆட­வர் ஓடி­ய­தா­க­வும் அதி­கா­ரி­கள் அவ­ரைத் துரத்­திப் பிடித்­த­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.