'சிங்கப்பூர் ஐடல்' போட்டி முன்னாள் தலைமை நடுவர் கென் லிம் மீது மானபங்கக் குற்றச்சாட்டு

'சிங்கப்பூர் ஐடல்' போட்டி முன்னாள் தலைமை நடுவர் கென் லிம் மீது மானபங்கக் குற்றச்சாட்டு

2 mins read
7e9d5b71-10c8-4cd1-9df2-50bdcf503f21
-

'சிங்­கப்­பூர் ஐடல்' எனும் பாட்­டுத் திறன் போட்­டி­யின் தலைமை நடு­வ­ரா­கச் செயல்­பட்ட 58 வயது கென் லிம் சி சியாங் (படம்) மீது நேற்று மான­பங்­கக் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது.

'ஹைப் ரெகார்ட்ஸ்' எனும் நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­நரான லிம், 25 வய­துப் பெண்ணை மான­பங்­கப்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. ஹெண்­டர்­சன் ரோட்­டில் அமைந்­தி­ருக்­கும் 'ஹைப் ரெகார்ட்ஸ்' அலு­வ­ல­கத்­தில் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 23ஆம் தேதி அவர் அவ்­வாறு நடந்­து­கொண்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட பெண்­ணின் அடை­யா­ளத்­தைக் காக்­கும் பொருட்டு மேல்­வி­வ­ரங்­கள் வெளி­யிட அனு­மதி இல்லை.

நேற்­றுக் காலை 9.25 மணிக்கு நீதி­மன்­றத்­தில் லிம்­மி­டம் அவர்­மீதான குற்­றச்­சாட்டு படித்­துக் காட்­டப்­பட்­டது. உறு­தி­யான பார்­வை­யு­டன் காணப்­பட்ட அவ­ரு­டன் அவ­ரது மனைவி வந்­தி­ருந்­தார். இவர்­க­ளுக்கு இரு மகன்­கள் உண்டு.

கிட்­டத்­தட்ட 15 மாத விசா­ர­ணைக்­குப் பிறகு லிம் தான் குற்­ற­மற்­ற­வர் என்ற நிலைப்­பாட்­டில் உறு­தி­யாக இருப்­ப­தா­க­வும் குற்­றத்தை ஒப்­புக்­கொள்­ளப் போவ­தில்லை என்­றும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

$10,000 பிணை­யில் வெளி­வந்த அவர் வெளி­நாடு செல்ல அனு­மதி கோரி­னார்.

சொத்­துச் சந்தை தொடர்­பான விவ­கா­ரங்­களை முன்­னிட்டு மே மாதம் 25ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 4ஆம் தேதி வரை தாய்­லாந்­தின் புக்­கெட் நக­ருக்­குச் செல்ல அவர் சார்­பில் விண்­ணப்­பிக்­கப்­பட்­டது. இதனை முன்­னிட்டு பிணைத் தொகை $20,000ஆக உயர்த்­தப்­பட்ட நிலை­யில் லிம்­மின் நண்­பர் பிணை­யைச் செலுத்­தி­னார். தாய்­லாந்து செல்­வ­தற்கு முன்­னர் லிம் தனது முழு பய­ணத் திட்ட விவ­ரங்ளை அதி­கா­ரி­க­ளி­டம் சமர்ப்­பிக்க வேண்­டும் என உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. வழக்கு விசா­ரணை ஏப்­ரல் 14ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் லிம்­மிற்கு மூன்று ஆண்­டு­கள் வரை­யி­லான சிறைத்­தண்­ட­னை­யு­டன் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­டக்­கூ­டும். அவர் 50 வய­தைக் கடந்­த­வர் என்­ப­தால் பிரம்­ப­டி­யி­லி­ருந்து விலக்கு அளிக்­கப்­படும்.