செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
2eb8d07f-13de-42f0-9d97-bea9a19f1ac2
-

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிக மருத்துவக் காப்பீடு

எஸ் பாஸ் மற்றும் வேலை அனுமதிச் சீட்டு (ஒர்க் பெர்மிட்) ஊழியர்களுக்கு அவர்களின் முதலாளிகள் ஏற்படுத்தித் தரவேண்டிய மருத்துவக் காப்பீட்டுத் தொகையின் அளவு ஜூலை 1 முதல் உயருகிறது. ஆண்டுக்கு குறைந்தபட்சம் $15,000 வரை காப்பீடு கோரப்படும் தொகை $60,000க்கு அதிகரிக்கும். இந்தப் புதிய நடைமுறை பணிப்பெண்களின் முதலாளிகளுக்கும் பொருந்தும். மருத்துச் செலவுகள் அதிகரிக்கும் நிலை யில், தங்களது பணிப்பெண்களுக்கும் ஊழியர்களுக்கும் முதலாளிகள் செலுத்த நேரிடும் மருத்துவக் கட்டணங் களைக் குறைக்க புதிய நடைமுறை உதவும் என்று மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது. ஐந்து விழுக்காடு வெளிநாட்டு ஊழியர்களின் மருத்துவக் கட்டணங்கள், தற்போதைய $15,000 என்னும் மருத்துவக் காப்பீட்டுக் கோரல் வரம்பை தாண்டியுள்ளதாகவும் அது குறிப்பிட்டது. இதனால், ஆண்டுக்குச் சராசரியாக 1,000க்கும் மேற்பட்ட முதலாளிகள் இந்த அதிகச் செலவை எதிர்நோக்குவதாக மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.

அதிக மருத்துவக் காப்பீட்டுக்கு ஏற்பாடு செய் வதோடு, மருத்துவக் கட்டணத்திற்கான கோரிக்கை விடுக்கப்படும்போது, மொத்த கோரிக்கையில் முதல் $15,000 கழித்தது போக எஞ்சியுள்ள தொகையில் 25 விழுக்காட்டை முதலாளிகள் தரவேண்டும் என்பதும் புதிய விதி. உதாரணமாக, இதய அறுவை சிகிச்சைக்கு $60,000 கோரிக்கை விடுக்கும் நிலையில், அதில் $15,000 கழித்த பின் எஞ்சியுள்ள $45,000ல் 25%, அதாவது $11,250ஐ முதலாளிகள் செலுத்த வேண்டும். எஞ்சியுள்ள $48,750க்கு காப்பீட்டு நிறுவனம் பொறுப்பேற்கும்.

மின்சார வாகனங்களுக்கு மாற

$6 பில்லியன் செலவிடும் குழுமம்

ஆகப்பெரிய போக்குவரத்துக் குழுமமான கம்ஃபர்ட் டெல்குரோ கார்ப், தனது பேருந்துகளையும் டாக்சிகளை யும் மின்சார வாகனங்களாக மாற்ற $6 பில்லியனைச் செலவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொகை, அந்தக் குழுமத்தின் தற்போதைய சந்தை மதிப்பீட்டைப் போல ஏறக்குறைய மூன்று மடங்கு என்று குழுமத்தின் தலைவர் லிம் ஜிட் போ, 83, நேற்றிரவு ரிட்ஸ் கார்ல்டன் மில்லேனியா சிங்கப்பூர் ஹோட்டலில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் தெரிவித்தார். தமது குழுமத்தின் பெரும் பான்மை முதலீடுகள் புதிய மின்சார வாகனங் களின்மீது செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார். பேருந்துச் சேவை யிலும் டாக்சி சேவையிலும் முன்னணி வகிக்கும் தமது குழுமம் வர்த்தக வாகனங்களிலும் முன்னிலை வகிக்க மின்சார வாகனங்களுக்கு மாறவேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறினார்.

உலக நிறுவனத்தின் பரிந்துரைக்கு ஏற்ப தடுப்பூசி அணுகுமுறை

மாற்றம் கண்டு வரும் கொள்ளைநோயின் தன்மைக்கேற்ப கொவிட்-19 தடுப்பூசிக்கான பரிந்துரைகளில் உலக சுகாதார நிறுவனம் மாற்றம் செய்துள்ளது. சிங்கப்பூரில் தற்போது கொடுக்கப்பட்டு வரும் பூஸ்டர் மற்றும் சிறு வர்களுக்கான தடுப்பூசி அணுகுமுறை அந்த மாற்றங் களுக்கு ஏற்ப அமைந்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆபத்து அதிகம் உள்ளோர் மட்டும் தற்போதைய கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசிக்கான உத்திபூர்வ நிபுணத்துவ ஆலோசனைக் குழு கடந்த செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்து இருந்தது. அதிக அளவிலான மக்களிடம் நோய் எதிர்ப்பாற்றல் வலுவடைந்திருப்பதால் தற்போதைய பூஸ்டர் தடுப்பூசி குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும் என்று தனது பரிந்துரைக்கு அது விளக்கம் தெரிவித்து இருந்தது.

இது தொடர்பாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய வினாக் களுக்கு அமைச்சு பதிலளித்துள்ளது. ஆறு மாதம் முதல் நான்கு ஆண்டுகள் வரையிலான வயதுடைய குழந்தை கள் இரண்டு தவணை மொடர்னா தடுப்பூசியையோ மூன்று தவணை ஃபைசர் தடுப்பூசியையோ போட்டுக் கொள்ளப் பரிந்துரைக்கப் படுவதாக அந்தப் பதிலில் அது குறிப்பிட்டுள்ளது. குழந்தைகளுக்கும் பதின்மவயதின ருக்கும் ஆற்றலும் பாதுகாப்பும் உள்ள அடிப்படைத் தடுப்பூசிகளையும் பூஸ்டர் தடுப்பூசியையும் போட்டுக் கொள்ளுமாறு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத் திருப்பதற்கு ஏற்ப தனது பரிந்துரையும் அமைந்திருப் பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.