ஒவ்வொரு காலாண்டிலும் வழங்கப்படும் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு யு-சேவ் மற்றும் சேவை, பராமரிப்புக் கட்டணக் கழிவை வீவக வீட்டில் வசிக்கும் ஏறக்குறைய 950,000 சிங்கப்பூர் குடும்பங்கள் இம்மாதம் பெறும் என்று நிதி அமைச்சு நேற்று கூறியது.
தகுதி உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஏப்ரலில் தொடங்கும் நிதி ஆண்டு 2023ல், வீட்டின் அளவைப் பொறுத்து $440 முதல் $760 வரையிலான கட்டணக் கழிவுகளைப் பெறும். இந்தத் தொகை, நிதி ஆண்டு 2022ல் அளிக்கப்பட்டதைப்போல இருக்கும். நிதி ஆண்டு 2022ல் யு-சேவ் கட்டணக் கழிவு இருமடங்காக்கப்பட்டது. இந்தக் கட்டணக் கழிவு பயனீட்டுக் கட்டணப் பட்டியலில் இடம்பெறும்.
அதேபோல, குடியிருப்புப் பேட்டை பராமரிப்புக்கான சேவை, பராமரிப்புக் கட்டணத்திலும் 1.5 மாதங்கள் முதல் 3.5 மாதங்கள் வரையிலான கழிவு இடம்பெறும்.
பணவீக்கம், ஜிஎஸ்டி ஆகிய வற்றின் அதிகரிப்பை ஈடுசெய்யஇவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டதற்கு இணங்க இந்தக் கட்டணக் கழிவு கள் வழங்கப்படுகின்றன.

