எம்ப்ளாய்மண்ட் பாஸில் 27 வேலைகளைப் பெற ஊக்கப்புள்ளி வழங்கும் திட்டம்

எம்ப்ளாய்மண்ட் பாஸில் 27 வேலைகளைப் பெற ஊக்கப்புள்ளி வழங்கும் திட்டம்

2 mins read
ea5a909f-4438-4f02-813c-5bb58e9e8cd1
-

சிங்­கப்­பூ­ரில் எம்ப்­ளாய்­மெண்ட் பாஸில் வேலை பெறு­வ­தற்­கான தகு­தியை எட்­டு­வ­தற்கு உத­வி­யாக 27 வித­மான வேலை­க­ளுக்கு ஊக்­கப்­புள்­ளி­கள் (போனஸ் பாய்ண்ட்) வழங்­கப்­பட உள்­ளன.

செயற்கை நுண்­ண­றிவு விஞ்­ஞா­னி­கள், தாதி­யர், கரிம வர்த்­த­கர்­கள் மற்­றும் உயர்­நிலை நிதி ஆலோ­ச­கர்­கள் போன்­றோர் இந்­தப் பட்­டி­ய­லில் இடம்­பெ­று­வர்.

ஊக்­கப்­புள்­ளி­கள் அடிப்­ப­டை­யி­லான வேலைக் கட்­ட­மைப்பு இவ்­வாண்டு செப்­டம்­பர் 1ஆம் தேதி முதல் செயல்­ப­டத் தொடங்­கும்­போது எம்ப்­ளாய்­மண்ட் பாஸுக்­கான புதிய முறை­யின்­கீழ் பரி­சீ­லிக்­கப்­படும்.

எம்ப்­ளாய்­மண்ட் பாஸுக்­குப் புதி­தாக விண்­ணப்­பம் செய்­வோ­ருக்­கான இரண்டு புதிய தகு­தி­வ­ரம்­பு­கள் நேற்று அறி­விக்­கப்­பட்­டன.

COMPASS எனப்­படும் இந்­தப் புதிய கட்­ட­மைப்பு பற்றி மனி­த­வள அமைச்சு கடந்த ஆண்டு அறி­வித்­தது.

இங்கு பற்­றாக்­கு­றை­யாக உள்ள திறன்­க­ளைப் பெற்­றி­ருக்­கும் விண்­ணப்­ப­தா­ரர்­க­ளு­டன் சிங்­கப்­பூ­ரின் உத்­தி­பூர்வ பொரு­ளி­யல் முன்­னு­ரி­மை­க­ளுக்­குப் பங்­க­ளிக்­கும் நிறு­வ­னங்­களும் எம்ப்­ளாய்­மண்ட் பாஸ் பெற உதவு­ வ­தற்­கான ஊக்­கப்­புள்­ளி­க­ளைப் பெறும்.

பொரு­ளி­யல் வாய்ப்­பு­க­ளைப் பெறு­வ­தற்­குத் தேவைப்­படும் வெளி­நாட்டு மனி­த­வ­ளத்தை இங்கு வேலைக்­க­மர்த்த இந்­தப் புள்­ளி­கள் உள்­ளூர் நிறு­வ­னங்­க­ளுக்கு உத­வி­பு­ரி­யும்.

ஊக்­கப்­புள்­ளி­க­ளைப் பற்­றிய விவ­ரங்­க­ளம் எஸ்­ஓ­எல் எனப்­படும் பற்­றாக்­குறை வேலைப் பட்­டி­லும் நேற்று வெளி­யி­டப்­பட்­டன. சிங்­கப்­பூ­ரில் பற்­றாக்­கு­றை­யாக உள்ள திற­னா­ளர் வேலை பற்­றிய விவ­ரங்­கள் அந்­தப் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்­ளன.

எஸ்­இபி எனப்­படும் உத்­தி­பூர்வ பொரு­ளி­யல் முன்­னு­ரி­மைத் திட்­டத்­திற்­கான ஊக்­கப்­புள்­ளி­கள், சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் குறிக்­கோள்­க­ளுக்கு முக்­கி­யப் பங்­க­ளிக்­கக்­கூ­டிய நிறு­வ­னங்­க­ளுக்­கும் வழங்­கப்­படும்.

பற்­றாக்­குறை உள்ள திற­னா­ளர்­களை ஈர்க்க அவற்­றுக்­கும் வாய்ப்­ப­ளிக்க இவ்­வாறு செய்­யப்­ப­டு­கிறது.

திற­னா­ளர்­கள் தேவைப்­படும் 27 வித­மான வேலை­களை எஸ்­ஓ­எல் அடை­யா­ளம் கண்­டுள்­ளது.

அர­சாங்க அமைப்­பு­கள், தொழிற்சங்கம் மற்­றும் முத­லா­ளி­க­ளு­டன் இணைந்து மூன்று பரி­சீ­ல­னை­க­ளின் அடிப்­ப­டை­யில் பட்­டி­யல் தயா­ரிக்­கப்­பட்­ட­தாக மனி­த­வள அமைச்­சும் வர்த்­தக தொழில் அமைச்­சும் கூட்­டா­கத் தெரி­வித்­துள்­ளன.

இந்த வேலை­களில் சேரு­வோ­ருக்கு இன்­னும் கணி­ச­மான திறன்­கள் தேவைப்­ப­டு­கின்­றன.

இவற்­றுக்கு உள்­ளூர் திற­னா­ளர்­க­ளைத் தயார் செய்­வ­தற்­கான திட்­டத்தை உரு­வாக்க தொழில்­து­றை­யி­ன­ரு­டன் இணைந்து பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கம் பணி­யாற்ற உள்­ளது.

இந்­தப் பட்­டி­யல், நீக்­குப்­போக்கு­களை சரி­ச­ம­மாக்­கும் வகை­யில் மூன்­றாண்­டு­க­ளுக்கு ஒரு­மு­றையோ அல்­லது தேவைப்­பட்­டால் ஆண்­டுக்கு ஒரு முறையோ மறு­ஆய்வு செய்­யப்­படும்.

வேளாண்­தொ­ழில்­நுட்­பம், நிதிச் சேவை­கள், பசு­மைப் பொரு­ளி­யல், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, தக­வல் தொடர்­புத் தொழில்­நுட்­பம், கடல்­துறை என்­னும் ஆறு தொழில்­து­றை­களில் உள்ள வேலை­களை இந்­தப் பட்­டி­யல் உள்­ள­டக்கி உள்­ளது.