ஞாயிறு முரசு கதை/கவிதை பக்கத்தில் வெளிவரும் உள்ளூர் சிறுகதைகளை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தவறாமல் வாசிப்பதுண்டு. சிறுகதையின் எழுத்தாளர் கள் பெரும்பாலும் வயது மூத்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். கதைகளும் யதார்த்த வாழ்வியலைத் தொட்டு எழுதப் படுவதில்லை. இளையர்களின் படைப்புகள் வெளிவரவேண்டும் என்பது எனது பரிந்துரை. இளையர்களும் திறம்பட எழுத, முற்போக்கு இலக்கியங்களை வாசிக்க, ரஷ்ய எழுத்தாளர்கள் அன்டன் செக்கோவ், மாக்சிம் கார்க்கி ஆகியோரின் சிறுகதை கள் மற்றும் சிலி நாட்டு எழுத்தாளர் பாப்லோ நெருடாவின் கவிதைகளையும் தமிழ் முரசு வெளியிடலாம்.
-எஸ் ஜி ராஜன், 60
தமிழ்முரசு பதில்: மூத்த எழுத்தாளர்களு டன் இளையோரின் படைப்புகளும் இடம் பெறுகின்றன. ஐரோப்பிய எழுத்தாளர்களின் கதை/கவிதை இடம்பெறுவது குறித்த ஆலோசனைக்கு நன்றி! பரிசீலிக்கிறோம்.
தொலைக்காட்சித் திரைப்படங்கள்
சன் டிவி, வண்ணத்திரை தொலைக்காட்சி, வசந்தம் தொலைக்காட்சி போன்றவை ஏற்கெனவே திரையிட்ட அதே திரைப்படங்களை ஒளிபரப்புவது ஏன்? குறிப்பாக சன் டிவியும் வண்ணத்திரையும் ஒரு வாரம் ஒளியேற்றிய அதே திரைப்படங்களை மறுவாரமும் 'முதல் முதலாக' என்ற வார்த்தைகளுடன் மீண்டும் ஒளியேற்றுகிறார்கள். எத்தனையோ பக்திப் படங்கள், பழைய படங்கள் இருக்கும்போது ஏற்கெனவே திரையிட்ட நான்கு பக்தி படங்களை (கோட்டை யம்மன், பாளையத்தம்மன் போன்றவை) மீண்டும் காட்டி ஏன் வெறுப்பேற்று கிறார்கள்?
சன் டிவிக்கும் வண்ணத் திரைக்கும் மாதாமாதா கட்டும் சந்தாப் பணத்திற்கு எந்தப் பலனுமில்லை.
சனிக்கிழமைகளில் வசந்தம் தொலைக் காட்சி ஒளிபரப்பும் பழைய படங்கள்கூட அண்மையில் ஒளியேறியவையே. பழைய படங்களுக்கு அவ்வளவு பஞ்சமா?
மற்ற நேயர்களுக்கும் இந்த ஆதங்கம் இருக்கும் என்று நம்புகிறேன். இதை யாரிடம், எங்கே கொண்டு செல்வது என்று தெரியாமல் இருந்தபோது தமிழ் முரசில் 'வாசகர் குரல்' இடம்பெறுவதை அறிந்தேன்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி
இதன் மூலமாக ஒரு தீர்வு கிடைக்கும் என்று இதனை எழுதுகிறேன். தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதைக் கவனத்தில் கொண்டு தரமான, அடிக்கடி பயன்படுத்தாத பழைய படங்கள் மற்றும் பக்திப் படங்களை ஒளிபரப்புமாறு வேண்டுகிறேன்.
-வி கண்ணியம்மாள்

