மன்னிப்புக் கேட்ட டிபிஎஸ்

மன்னிப்புக் கேட்ட டிபிஎஸ்

2 mins read
d8381e01-eb69-4b28-b06e-c72b7ca00e1e
-

சங்கடத்தை ஏற்படுத்திய சேவைத் தடை, இடையூறு; 16 மாதங்களில் 2வது சம்பவம்

சிங்கப்பூரின் ஆகப்பெரிய வங்கி யான டிபி­எஸ், மின்­னி­லக்­கச் சேவை­யில் ஏற்­பட்ட இடை­யூறு களுக்­காக தனது பங்­கு­தா­ரர் களி­ட­மும் வாடிக்­கை­யா­ளர்­க­ளி­ட­மும் நேற்று பகி­ரங்­க­மாக மன்­னிப்­புக் கேட்டது.

சேவை­யில் ஏற்­பட்ட தடங் கலைப் பற்றி விசா­ரிக்க சிறப்­புக் குழு ஒன்று அமைக்­கப்­படும் என்று ஆண்டு பொதுக் கூட்­டத்­தில் சிங்­கப்­பூ­ரின் டிபி­எஸ் அறி­வித்­தது.

புதன்­கி­ழமை அன்று மின்­னி­லக்க வங்­கிச் சேவைகள் செயல் படா­த­தால் பல வாடிக்­கை­யா­ளர்­கள் திண்­டா­டி­னர்.

பதி­னாறு மாதங்­களில் இரண்­டா­வது முறை­யாக ஏற்­பட்ட இந்த சேவைத் தடை­யால் மிக­வும் சங்­க­டப்­ப­டு­கி­றோம் என்று அதன் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யான பியூஷ் குப்தா தெரி­வித்­தார்.

"24 மணி நேர­மும் தடை­யற்ற மின்­னி­லக்­கச் சேவையை உறுதி செய்­வதே எங்­க­ளு­டைய முக்­கிய முன்­னு­ரிமை. ஆனால் துர­திர்ஷ்டவச­மாக இதில் பின்­தங்­கி­விட்­டோம். இது­வொரு வருத்­த­மான சம்­ப­வம்," என்று பங்­கு­தா­ரர்களின் கூட்­டத்­தில் பியூஷ் குப்தா தெரி­வித்­தார்.

அப்­போது தனது ஆழ்ந்த வருத்­தத்­தைத் தெரி­விக்­கும் வகை­யில் டிபி­எஸ் வங்­கி­யின் தலை­வரான பீட்­டர் சியா, பங்­கு­தா­ரர்­கள் முன்­னி­லை­யில் தலை வணங்­கி­னார்.

டிபி­எஸ் வங்கி அதன் மின்­னி­லக்­கச் சேவை, தொழில்­நுட்ப வச­தி­க­ளுக்குப் பெயர்போனது.

இந்த நிலையில் கடந்த புதன்­கி­ழமை காலை அதன் மின்­னி­லக்­கச் சேவை, வங்­கி­யின் கைபேசிச் செயலி உள்ளிட்ட வற்றை வாடிக்­கை­யா­ளர்­கள் பயன்­ப­டுத்த முடி­ய­வில்லை.

அது மட்­டு­மல்­லா­மல் 'பேலா' செய­லி­யும் முத­லீட்டு இணை­யத் ­த­ள­மும் செயலி­ழந்து கிடந்­தது.

இந்­த இடையூறு மாலை 5.30 மணி வரை நீடித்­தது.

"2021ஆம் ஆண்டு சம்பவத்­துக்­குப் பிறகு சுயேச்சை நிபு­ணர்­க­ளு­டன் இணைந்து செயல் பட்டு சேவை­களை மீட்­கும் முறை­களை வலுப்­ப­டுத்­தினோம்.

"பொறி­யி­யல் குழுவை மேம்­ப­டுத்தினோம். 3வது தரப்பு சேவை களை நன்கு புரிந்­து­கொண்டு செயல்­பட்­டோம். துர­திர்ஷ்­ட­வசமாக இது போதாது," என்று திரு பியூஷ் குப்தா குறிப்பிட்டார்

புதன்­கி­ழமை சேவைத் தடை யால் 40 முதல் 50 விழுக்­காடு வாடிக்கையாளர்­கள் பாதிக்­கப்­பட்டதாகவும் அவர் கூறினார்.

முதல் இரண்டு மணி நேரத்தில் டிபிஎஸ் மின்னிலக்கச் சேவைகளில் தடையும் அடுத்த பத்து மணி நேரம் இடையூறும் ஏற்பட்டது.