சிங்கப்பூர்-மலேசியா இடையே கட்டணம் செலுத்த புதிய கியூஆர் குறியீடு அறிமுகம்

சிங்கப்பூர்-மலேசியா இடையே கட்டணம் செலுத்த புதிய கியூஆர் குறியீடு அறிமுகம்

2 mins read
82dcf7a1-83f6-445a-a723-f9311aab1d8c
-

சிங்­கப்­பூர், மலே­சி­யா­வைச் சேர்ந்­த­வர்­கள், ஒரு­வர் மற்­ற­வர் நாட்­டுக்­குச் செல்­லும்­போது எளி­தாக கட்­ட­ணங்­க­ளைச் செலுத்த புதிய கியூ­ஆர் குறி­யீடு அறி­மு­கம் செய்­யப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் மலே­சிய பேங்க் நெகா­ரா­வும் கூட்­டாக இப்­பு­திய கட்­டண முறையை நேற்று அறி­வித்­தன.

இந்­தத் திட்­டத்­தில் பங்­கேற்­கும் வங்கி, நிதி நிறு­வ­னங்­க­ளின் வாடிக்­கை­யா­ளர்­கள் 'நெட்ஸ் மற்­றும் 'டுஇட்­நவ்' கியூ­ஆர் குறி­யீடு மூலம் கட்­ட­ணங்­க­ளைச் செலுத்­த­லாம்.

எல்­லை தாண்­டிய மின்­வர்த்­தக பரி­வர்த்­த­னை­க­ளுக்­கும் இத­னைப் பயன்­ப­டுத்த முடி­யும் என்று இரு அமைப்­பு­களும் தெரி­வித்­தன. நேற்றைய நில­வ­ரப்­படி சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த டிபி­எஸ், ஓசி­பிசி, யுஓபி ஆகி­யவை இத்­திட்­டத்­தில் இணைந்­துள்­ளன.

மலே­சி­யா­வில் அம்­பேங் மலே­சியா, பூஸ்ட் சிஐ­எம்பி பேங், ஹோங் லியோங் வங்கி, மே பேங்க் வங்கி, பப்­ளிக் பேங், ரேஸர் மெர்ச்­சண்ட் சர்­வீ­சஸ், டிஎன்ஜி டிஜிட்­டல், யுஓபி மலே­சியா உள்­ளிட்­டவை இதில் பங்­கேற்­றுள்­ளன.

கொள்­ளை­நோய் பர­வ­லுக்கு முன்பு இரு நாடு­க­ளுக்கு இடையே ஆண்­டுக்கு 12 மில்­லி­யன் பேர் பய­ணம் செய்­துள்ள நிலை­யில் வர்த்­தகர்­க­ளை­யும் வாடிக்­கை­யா­ளர்­க­ளை­யும் இணைக்­கும் இந்த கட்­டண முறை இரு தரப்­புக்­கும் எளி­தா­க­வும் வலு­வா­க­வும் இருக்­கும் என்று ஆணை­யம், பேங்க் நெகாரா ஆகியவற்றின் கூட்டு அறிக்கை தெரி­வித்­தது. இவ்­வாண்டு இறு­திக்­குள் எல்­லை­க­ளுக்கு இடையே ஒரு­வ­ருக்கு ஒரு­வர் நிதி­ய­னுப்­பும் சேவை­யைத் தொடங்­கும் திட்­ட­மி­ருப்­ப­தா­க­வும் அவை தெரி­வித்­தன.

ஆணை­யத்­தின் நிர்­வாக இயக்­கு­ந­ரான ரவி மேனன், இரு நாடு­க­ளை­யும் இணைக்­கும் கியூ­ஆர் குறி­யீடு, இவ்­வட்­டா­ரத்­தில் தடை­யற்ற கட்­டண இணைப்பு முறையை உரு­வாக்­கும் ஆசி­யானின் நோக்­கத்­தில் முக்­கிய மைல்­கல் என்று வரு­ணித்­தார்.

இத்­த­கைய எல்­லை தாண்­டிய இணைப்­பு­கள் குடி­ய­ர­சின் எல்­லை­க­ளுக்கு அப்­பால் வர்த்­த­கங்­க­ளை­யும் மேம்­ப­டுத்­து­வ­தோடு பர­வ­லான வாடிக்­கை­யா­ளர் களுக்குச் சேவை­யாற்ற சிறிய நிறு­வ­னங்­க­ளுக்­கும் வாய்ப்பு அளிக்­கிறது என்று அவர் குறிப்­பிட்­டார்.