குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக தங்கப்பதக்க வீரர் மீது குற்றச்சாட்டு

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக தங்கப்பதக்க வீரர் மீது குற்றச்சாட்டு

1 mins read
58cd9aa9-1a31-479a-9aa5-24ab937ee071
-

தென்­கி­ழக்கு ஆசிய விளை­யாட்­டில் தங்­கப்­ப­தக்­கம் பெற்ற சுவர்ப்பந்து விளையாட்டு வீரர் விவி­யன் ரம­ணன் மீது நேற்று குடித்­து­விட்டு வாக­னம் ஓட்­டி­ய­தாக குற்­றச்­சாட்டு கொண்டு வரப்­பட்­டுள்­ளது. விவி­யன், 37, இது­வரை மூன்று தங்­கப்­ப­தக்­கங்­களை வென்­றுள்­ளார்.

2017 கோலா­லம்­பூர் விளை­யாட்­டில் ஆண்­க­ளுக்­கான இரட்­டை­யர் போட்­டி­யில் வென்ற இரட்­டை­ய­ரில் அவ­ரும் ஒரு­வர்.

சிங்­கப்­பூர் சுவர்ப்பந்து பயிற்சி நிலை­யத்­தின் முன்­னாள் உரி­மை­யா­ள­ரான அவர் மீது, செம்­ப­வாங் ஹில்ஸ் டிரைவ் வழி­யா­கச் சென்­ற­போது வாக­னத்தை முறை­யாக கட்­டுப்­பாட்டு­டன் ஓட்டவில்லை என்று குற்­றம்­சாட்­டப்­பட்டது.

இத­னால் எதிர்­த்தி­சை­யில் வந்து கொண்­டி­ருந்த வாக­னத்­தின் பாதை­யில் இவ­ரது கார் நுழைந்து விபத்து ஏற்­பட்­டது.

2022 மே 21ஆம் தேதி காலை பத்து மணி­ய­ள­வில் நடந்த இந்த சம்­ப­வத்­தில் விவி­யன் குடித்­து­விட்டு வாக­னம் ஓட்­டி­ய­தாக நம்­பப்­படுகிறது.

இந்த வழக்கு செப்­டம்­பர் 26ஆம் தேதிக்கு ஒத்தி வைக்­கப்பட்டது.

குடித்­து­விட்டு வாக­னம் ஓட்­டி­னால் முதல் முறை குற்­றத்­திற்கு 10,000 வெள்ளி அப­ரா­த­மும் ஓராண்டு சிறைத் தண்­ ட­னை­யும் விதிக்­கப்­ப­ட­லாம்.