இலவச சிங்கப்பூர் சுற்றுலா மீண்டும் தொடக்கம்

இலவச சிங்கப்பூர் சுற்றுலா மீண்டும் தொடக்கம்

2 mins read
e86a8bbb-476c-4de1-9109-2be738b12cba
-

வெளி­நாட்­டி­லி­ருந்து விமா­னம் மூலம் சாங்கி விமான நிலை­யத்­துக்கு வந்து அங்­கி­ருந்து வேறொரு நாட்­டுக்­குப் பய­ணம் செய்­யும் பய­ணி­க­ளுக்­காக இல­வ­ச­மாக நடத்­தப்­படும் 'ஃபிரீ சிங்­கப்­பூர் டுவர்' சுற்­றுலா மூன்று ஆண்­டு­கள் இடை­வெ­ளிக்­குப் பிறகு மீண்­டும் நேற்று தொடங்­கி­யது.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக இந்த இல­வச சுற்­றுலா தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­தச் சுற்­றுலா ஒவ்­வொரு நாளும் நான்கு முறை நடத்­தப்­

ப­டு­கிறது.

ஒவ்­வொரு சுற்­று­லா­வும் மூன்று மணி நேரத்திற்கும் குறைவாக நீடிக்கும். இம்­முறை முதல்­மு­றை­யாக உள்­ளூர் சமூக இடங்­கள், குடியிருப்­புப் பகு­தி­கள் ஆகி­யவை சுற்­றுலா­வில் இடம்­

பெ­று­கின்­றன.

அடுத்த விமா­னப் பய­ணத்­துக்கு ஐந்­தரை மணி நேரத்­தி­

லி­ருந்து 24 மணி நேரம் வரை காத்­தி­ருக்­கும் பய­ணி­க­ளுக்­காக இந்­தப் புதிய ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

ஆகப் புதிய அம்­ச­மாக இரண்­டரை மணி நேர சாங்கி வட்­டார சுற்­றுலா சேர்க்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­குச் செல்­ப­வர்­கள் தெம்­ப­னிஸ் குடி­யி­ருப்பு வட்­டா­ரத்­தில் உள்ள வீட­மைப்பு, தெம்­ப­னிஸ் மத்­திய பூங்­கா­வில் உள்ள தனித்­தன்மை வாய்ந்த விளை­யாட்டு மையங்­கள் போன்­ற­வற்­றைக் கண்டு ரசிக்­க­லாம்.

சிங்­கப்­பூ­ரில் முதல் ஒருங்­

கி­ணைக்­கப்­பட்ட சமூக, வாழ்­வி­யல் மைய­மான 'அவர் தெம்­ப­னிஸ் ஹப்', சாங்கி தேவா­ல­யம் மற்­றும் அருங்­காட்­சி­ய­கம், சாங்கி வில்­லேஜ், சாங்கி கடற்­க­ரைப் பூங்கா ஆகிய இடங்­களும் அவர்­க­ளுக்­குக் காட்­டப்­படும்.

நகர்க் காட்சிச் சுற்றுலா, மர­பு­டைமை சுற்­றுலா, ஜுவல் சுற்­றுலா ஆகி­யவை மீண்­டும் இடம்­பெ­று­கின்­றன.

இவற்­றில் புதிய அம்­சங்­கள் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உதா­ர­ணத்­துக்கு, குடிமை வட்­டா­ரத்­தில் உள்ள சிங்­கப்­பூர் தேசிய கண்­காட்­சிக்­கூ­டம், ஆண்­டர்­சன் பாலம், பாடாங் திடல் போன்­றவை நகர்க் காட்சிச் சுற்றுலா இடம்­பெ­றும்.

இச்­சுற்­று­லா­வுக்­கா­கப் பயன்­

ப­டுத்­தப்­படும் பேருந்து மரினா பே நிதி வட்­டா­ரம் வழி­யாக கரை­யோ­ரப் பூந்­தோட்­ட­ங்க­ளுக்­குச் செல்­லும்.

மர­பு­டைமை சுற்­று­லா­வைத் தேர்ந்­தெ­டுப்­ப­வர்­க­ளுக்கு சைனா­ட­வுன், அரபு ஸ்தி­ரீட், ஹாஜி லேன் ஆகிய இடங்­க­ளைக் காணும் வாய்ப்பு கிடைக்­கும்.

இந்­தச் சுற்­றுலா வரும் ஜூன் மாதத்­தி­லி­ருந்து தொடங்­கும்.

ஜுவல் சுற்றுலாவைத் தேர்ந்­

தெ­டுப்­ப­வர்­கள் விமான நிலை­யத்­தில் உள்ள சிறப்பு அம்­சங்­

க­ளைக் கண்டு ரசிக்­க­லாம்.

ஷிஷைடோ ஃபாரஸ்ட் வேலி, எச்­எஸ்­பிசி ரேன் வோர்ட்­டெக்ஸ் ஆகி­ய­வற்றை அவர்­கள் காண­லாம். ஜுவல் டுவர் சுற்றுலாவை மேற்கொள்பவர்கள் உள்­ளூர்

பல­கா­ரங்­க­ளைச் சுவைக்கவும் பீ செங் ஹியாங், டோங் கார்­டன் போன்ற உள்­ளூர் உணவு நிறு­

வ­னங்­கள் மூலம் சிங்­கப்­பூ­ரின் உணவு மர­பு­டை­மை­யைப் பற்றி அறிந்துகொள்ளவும் வாய்ப்பு பெறுவர். இந்த இலவச சுற்றுலாக்களை உள்ளூர் நிறுவனமான மான்ஸ்டர் டே டுவர்ஸ் நடத்துகிறது.

சுற்றுலா செல்ல விரும்புவோர் சாங்கி விமான நிலையத்தின் இணையப்பக்கத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.