பல்மருத்துவத்துக்கான தேசிய பல்கலைக்கழக மையம், அலெக்சாண்டிரா மருத்துவ
மனையில் அதன் முதல் துணை நிபுணத்துவ மருந்தகத்தை அமைத்துள்ளது.
ஏற்கெனவே நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள, நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ள அல்லது அறிவாற்றல் குறைபாடு கொண்ட முதியவர்
களுக்கு ஏற்படும் பற்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குச் சிகிச்சை அளிக்க இந்த மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தகத்தைத் திறப்பதன் மூலம் முதிய நோயாளிகளுக்கு பற்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தடுக்கவும் அப்படியே பிரச்சினை ஏற்பட்டால் அதற்குத் தீர்வு காணவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பற்கள் தொடர்பான பிரச்
சினைகளுக்குச் சிகிச்சை பெறுவதை முதியோருக்கு இந்த மருந்தகம் எளிதாக்குகிறது.
மருந்தகத்தில் அறுவை சிகிச்சை இல்லாத மற்ற அடிப்படை பல்மருத்துவ சிகிச்சைகள் முதியோருக்கு அளிக்கப்படும்.
பற்கள் சொத்தையாகாமல் பேணிக் காப்பது, சொத்தையான பற்களை அகற்றுவது போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படும்.
பற்கள், வாய்ப் பகுதிதொடர்பான நோய் ஏற்பட்டால் முதியவர்களுக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், சுவாசப் பிரச்சினை போன்றவை ஏற்படக்கூடும், மோச
மடையக்கூடும் என்று அலெக்சாண்டிரா மருத்துவமனையின் தலைமை நிர்வாகி ஜேசன் புவா தெரிவித்தார். புதிய மருந்தகம் ஏறத்தாழ இரண்டு வீவக ஐந்தறை வீடுகளின் அளவுக்கு இருக்கிறது.
அதில் ஐந்து சிகிச்சை அறைகள் உள்ளன. சிகிச்சை அறைகள் முதியோருக்கு உகந்த பல்மருத்துவ சாதனங்களைக் கொண்டுள்ளன.
சக்கர நாற்காலி பயன்படுத்தும் முதியோர், சக்கர நாற்காலி
யிலேயே அமர்ந்தவாறு
பல்மருத்துவ சிகிச்சை பெற ஏதுவாக வசதிகள் உள்ளன.
மருந்தகத்தில் உள்ள நிபுணத்துவப் பல்மருத்துவர்கள் ஈறுகள் தொடர்பான நோய், பற்கள் தொடர்பான பிரச்சினைகள், செயற்கைப் பற்களைப் பொருத்துவது போன்ற சிகிச்சைகளை அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்த மாதம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்ட இந்த மருந்தகத்தில் தற்போது வாரத்துக்குச் சராசரியாக 80 பேர் சிகிச்சை
பெற்றுக்கொள்கின்றனர்.
மருந்தகத்தை சுகாதார அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் திறந்துவைத்தார்.

