வர்த்தகங்களின் பொறுப்பற்ற செயல்; டன்லப் சாலையில் இடையூறு

வர்த்தகங்களின் பொறுப்பற்ற செயல்; டன்லப் சாலையில் இடையூறு

2 mins read
16501e73-79c8-445f-bd60-d5126b46d22e
-
multi-img1 of 2

ரச்­சனா வேலா­யு­தம்

கடந்த 2014ஆம் ஆண்­டி­லி­ருந்து ஞாயிற்­றுக்­கி­ழ­மை­தோ­றும் தேக்கா வட்­டா­ரத்­தில் உள்ள டன்­லப் சாலை நண்­ப­கல் 12 மணி­யி­லி­ருந்து நள்­ளி­ரவு 12 மணி­வரை மூடப்­ப­டு­கிறது. வாகன நெரி­ச­லைச் சமா­ளிக்­க­வும் வார­யி­று­தி­களில் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அதிக அள­வில் வரு­

வ­தா­லும் இந்­தத் திட்­டம் அறி­விக்­கப்­பட்­டது. ஆனா­லும், இந்­தத் திட்­டத்தை தங்­க­ளுக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்தி, வணி­கத்தை மேம்­ப­டுத்த டன்­லப் சாலை­யில் சிலர் தற்­கா­லி­கக் கடை­களை அமைப்­பது, பல­ருக்­கும் இடை­யூ­றாக இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அதி­க­ரிக்­கும் வாட­கை­யைச் சமா­ளிக்க கடை­க­ளுக்கு வெளியே உள்ள இடத்தை சிலர் வாட­கைக்­குக் கொடுத்­துள்­ள­னர். அண்­மை­யில், நாணய மாற்­றுக் கடைக்கு வெளியே தையல் கடை ஒன்­றைத் தொடங்க இடம் வாட­கைக்கு விடப்­பட்­டது. அதில், இந்­தச் சிறு வணி­கங்­கள் செயல்­பட அனு­மதி இல்லை என்­ப­தால் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் மட்­டும் இது நடக்­கிறது.

சாலை தொடங்­கு­மி­டத்­தி­லேயே பங்­ளா­தேஷ் ஊழி­யர்­கள் சிலர் கடை அமைத்து கைப்­பை­கள், ஆடை­கள், பய­ணப்­பை­கள் போன்­ற­வற்றை விற்­கின்­ற­னர்.

சட்­டத்­துக்­குப் புறம்­பாக இந்­தக் கடை­களை நடத்­து­வோர், வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் பணத்தை நேர­டி­யாக வாங்க விரும்­பு­கி­றார்­கள். பண­மில்­லாப் பரி­வர்த்­த­னை­களை அவர்­கள் தவிர்க்­கி­றார்­கள் என்று அங்கு பய­ணப்­பை­களை விற்­கும் ஒரு­வர் கூறி­னார்.

கார­ணம், இடத்தை வாட­கைக்­கு­விட்ட வணி­கர்­கள் மூலம் இந்­தப் பண­மில்லா பரி­வர்த்­தனை நடப்­ப­தால், இந்­தச் சட்­ட­வி­ரோத கடை­களை அமைத்­தோ­ருக்கு பணம் கிடைக்க சில நாள்­கள் ஆகும் எனச் சொல்­லப்­ப­டு­கிறது.

வெளி­நாட்டு ஊழி­யர்­களை தங்­க­ளின் கடை­க­ளுக்கு ஈர்க்க சிங்­டெல், ஸ்டார்­ஹப் போன்ற தக­வல் தொடர்பு நிறு­வ­னங்­க­ளின் விளம்­பர அட்­டை­கள் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

கடை­க­ளுக்கு வெளியே சிறு கூடா­ரங்­களை அமைத்து, மக்­க­ளுக்குத் தேவைப்­படும் கைப்­பேசி சேவை­களை அளிப்­ப­தோடு, பொருள்­களும் விற்­கப்­ப­டு­கின்­றன.

இந்­தப் பழக்­கத்­தைப் பின்­பற்­றாத கடை­கள், அந்­தக் கூடா­ரங்­கள் தங்­க­ளுக்கு இடை­யூ­றாக உள்­ள­தா­கக் குறிப்­பிட்­டன. சாலை நடு­வில் இப்­ப­டிக் கடை­களை அமைத்து பொருள்­களை விற்­பது, வாடகை செலுத்தி தொழில் செய்­யும் வணி­கர்­க­ளுக்­குத் தொல்­லை­யாக இருப்­ப­தா­கக் கடைக்­கா­ரர்­கள் பல­ரும் கூறி­னர்.

சாலை மூடப்­ப­டு­வ­தால் சிராங்­கூன் சாலை­யி­லி­ருந்து தமது கடைக்கு மளி­கைப் பொருள்­களை தள்­ளு­வண்­டி­யில் ஏற்­றிக்­கொண்டு வரும் கடைக்­கா­ரர் ஒரு­வர், இந்­தச் சாலை­யோ­ரக் கடை­கள் இடை­யூ­றாக இருப்­ப­தா­கப் பகிர்ந்­து­கொண்­டார்.

நடக்க இட­மில்­லாத நிலை­யில் தள்­ளு­வண்­டியை எடுத்­துச்­செல்ல சிர­மப்­ப­டு­வ­தாக அவர் கூறி­னார்.

கட்­ட­ண­மில்லை என்­ப­தால் சிலர் தங்­க­ளது வாக­னங்­க­ளை­யும் அங்கு நிறுத்­தி­விட்­டுச் செல்­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

"இதற்­கு­முன் அதி­கா­ரி­க­ளின் கண்­கா­ணிப்பு இருந்­த­தால், அவர்­க­ளால் வாக­னத்தை நிறுத்த முடி­ய­வில்லை. ஆனால், ஒரு மாத­மாக அதி­கா­ரி­கள் வரா­மல் இருப்­ப­தால் நண்­ப­கல் 12 மணிக்கு முன்­பாக வாக­னத்தை என் கடைக்­கு­முன் நிறுத்­தி­வி­டு­கி­றார்­கள்," என்று டன்­லப் சாலை­யில் கடை வைத்­தி­ருக்­கும் ஒரு­வர் குறிப்­பிட்­டார்.

மக்­க­ளுக்கு நன்­மை­ய­ளிக்­கும் என்ற நோக்­கத்­தில் குறிப்­பிட்ட நேரத்­திற்­குச் சாலையை மூடும் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­போ­தும், அத­னைப் பலர் தவ­றா­கப் பயன்­ப­டுத்தி மற்­ற­வர்­க­ளுக்­குச் சிர­மத்­தைக் கொடுப்­ப­தா­கப் பல­ரும் கவலை தெரி­வித்­த­னர்.