இவ்வாண்டின் முதல் காலாண்டில் தனியார் வீடுகளின் விலை 3.2 விழுக்காடு ஏற்றம் கண்டது.
தனியார் வீடுகளுக்கான விற்பனை குறைந்துள்ளபோதிலும் இந்நிலை ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்
தக்கது.
தனியார் தரை வீடுகளின் விலையும் தனியார் அடுக்குமாடி வீடுகளின் விலையும் ஏற்றம் கண்டுள்ளன.
குறிப்பாக, நகர மையத்துக்கு அருகில் உள்ள வட்டாரங்களில் உள்ள தனியார் வீடுகளின் விலை ஏற்றம் கண்டுள்ளது.
கடந்த ஆண்டின் இறுதி காலாண்டில் தனியார் வீடுகளின் விலை வெறும் 0.4 விழுக்காடு உயர்ந்தது.
ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் கடந்த மாதம் தனியார் வீடு
களின் விலை 11.3 விழுக்காடு உயர்ந்ததாக நகர மறுசீரமைப்பு ஆணையம் வெளியிட்ட புள்ளி
விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தரவுகள் கடந்த மாதம் நடுப்பகுதி வரையிலானவை.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் தரை வீடுகளின் விலை 5.7 விழுக்காடு ஏற்றம் கண்டது.
அதற்கு முந்திய காலாண்டைவிட இது 0.6 விழுக்காடு அதிகம்.
இதற்கிடையே, தனியார் அடுக்குமாடி வீடுகளின் விலை அடுத்த சில காலாண்டுகளில் சீராக இருக்கக்
கூடும் அல்லது சிறிதளவு அதிகரிக்கக்கூடும் என்று முன்னுரைக்கப்
பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தனியார் வீடுகளின் ஒட்டுமொத்த விலை அதிகரிப்பு இவ்வாண்டு மெதுவடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்
படுகிறது.
கடந்த ஆண்டு ஒட்டுமொத்த விலை அதிகரிப்பு 8.6 விழுக்காடாகப் பதிவானது.

