செம்ப்கார்ப் மரின் (செம்ப்மரின்) அதன் பெயரை
சீட்ரியம் என மாற்ற பரிந்துரை செய்துள்ளது. கெப்பல் ஆஃப்ஷோர் அண்ட் மரின் நிறுவனத்தை அது கடந்த மாதம் வாங்கியது.
மேலும் பெரிய நிறுவனமாகிவிட்ட நிலையில் தனது பெயரை மாற்ற அது விரும்புகிறது. பெயர் மாற்றத்துக்கான பரிந்துரையை அது நேற்று
முன்வைத்தது. உலகத் தரம்வாய்ந்த திறன்களையும் பொறியியல் ஆற்றல்களையும் இந்த நிறுவனம் இணைக்க இருக்கிறது.
அதன்மூலம் உருமாறக்கூடிய, நீடித்த நிலைத்தன்மை உள்ள கடலோர, எரிக்தி தீர்வுகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக செம்ப்மரின் கூறியது.
1,000க்கும் மேற்பட்ட தெரிவுகளிலிருந்து இந்த சீட்ரியம் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே நிறுவனத்துக்கு சீட்ரியம் என்ற பெயர் சூட்டப்படும் என்று நிறுவனத்தின் நிர்வாகம் தெரிவித்தது.

