தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'கம்ஃபர்ட் டெல்குரோ' $200,000 நன்கொடை

1 mins read
c9d25f33-a846-4c8a-aa11-b5ec12640af4
-

மூத்தோருக்கு மளிகைப் பொருள்கள், மருத்துவ உதவி, நடமாட்டச் சாதனங்கள் போன்றவற்றை வழங்க உதவும் நோக்கில், 'கம்ஃபர்ட் டெல்குரோ' நிறுவனம் $200,000 நன்கொடை வழங்கியுள்ளது.

ஏறக்குறைய 710 மூத்தோர் இதன்மூலம் பலனடைவர். சென்ற வெள்ளிக்கிழமை 'லயன்ஸ் பிஃப்ரெண்டர்ஸ் சர்விஸ் அசோசியேஷன்', 'என்டியுசி-யூ கேர் ஃபண்ட்' எனும் இரு அமைப்புகளுக்கு, ஒவ்வொன்றிற்கும் $100,000 காசோலையை நிறுவனம் வழங்கியது.

ஏறத்தாழ 600 முதியவர்களின் அன்றாடச் செலவுகளுக்கு இது உதவும் என்று 'லயன்ஸ் பிஃப்ரெண்டர்ஸ்' அமைப்பு கூறியது. 'ஹெல்த் ஃபார் லைஃப்' அறநிதித் திட்டத்திற்கு இந்த நன்கொடையைப் பயன்படுத்தப்போவதாக 'என்டியுசி-யூ கேர்' கூறியது. கிட்டத்தட்ட 60 முதியவர்களைப் பேண இது உதவும்.

'கம்ஃபர்ட்டெல்குரோ' நிறுவனம் அதன் 20ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த நன்கொடைகளை வழங்கியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் அது ஏறக்குறைய $30 மில்லியனைப் பல்வேறு அறநிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.