பாலியல் வன்கொடுமை முயற்சி தொடர்பில் ஆடவருக்குச் சிறை, பிரம்படிகள்

1 mins read
bae8f41d-03f9-4612-abd4-1b61750e89f9
-

மலே­சி­யப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பயின்ற ஆட­வர் ஒரு­வ­ரும் அவ­ரின் தோழி­யும் ஒரே வீட்­டில் வெவ்­வேறு அறை­களை வாட­கைக்கு எடுத்­துத் தங்­கி­யி­ருந்­த­னர். இரு­வருக்­கும் வயது 26.

ஆட­வர் இரு­முறை தன் தோழிக்கு குடி­நீ­ரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலி­யல் வன்புணர்வு செய்ய முயன்­ற­தா­கக் கூறப்­பட்­டது.

அதன் தொடர்­பில் சுமத்­தப்­பட்ட மூன்று குற்­றச்­சாட்­டு­களை ஆட­வர் ஒப்­புக்­கொண்­ட­தை அடுத்து அவ­ருக்கு 17 ஆண்டு சிறைத்­தண்­ட­னை­யும் 14 பிரம்­படி­களும் விதிக்­கப்­பட்­டன. தண்­டனை விதிக்­கும்­போது மேலும் நான்கு குற்­றச்­சாட்­டு­களும் கருத்­தில் கொள்­ளப்­பட்­டன.

பாதிக்­கப்­பட்ட பெண்­ணின் அடை­யா­ளத்­தைப் பாது­காக்­கும் பொருட்டு, ஆட­வ­ரின் பெயரை வெளி­யிட அனு­மதி இல்லை.

பாதிக்­கப்­பட்ட பெண்­ணுக்கு அதி­கம் தண்­ணீர் அருந்­தும்­படி மருத்­து­வர் பரிந்­து­ரைத்­ததை அறிந்­து­கொண்ட ஆட­வர், அவ­ருக்கு எப்­போ­தும் மாலை­யில் ஒரு குவளை குடி­நீர் தரு­வது வழக்­கம்.

அந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு தண்­ணீ­ரில் மயக்க மருந்து கலந்து தந்த ஆட­வர் 2020ஆம் ஆண்டு ஜன­வ­ரி­யி­லும் மார்ச் மாதத்­தி­லும் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்­ற­தா­கக் கூறப்­பட்­டது.

இரண்­டா­வது சம்­ப­வத்­தில் குடி­நீரை அருந்­தி­ய­து­போல் நடித்­த­தால் மாது அவ­ரைக் கையும் கள­வு­மா­கப் பிடித்­தார்.

நெருங்­கிய நண்­பரே தவ­றாக நடந்­து­கொண்­ட­தால் அதிர்ச்சி அடைந்த மாது காவல்­து­றை­யி­டம் புகார் அளித்­தார். அதைத் தொடர்ந்து ஆட­வர் கைது செய்­யப்­பட்­டார்.