75% பறவைகள் இடமாற்றம்

ஜூரோங்கிலிருந்து புதிய பறவைகள் மகிழ்வனத்துக்கு மாற்றும் பணி தொடர்கிறது

ஜூரோங் பற­வைப் பூங்­கா­வி­லி­ருந்து 3,500 பறவைகளில் ஏறக்­கு­றைய முக்­கால்­வாசி பற­வை­கள், அதா­வது 75% பற­வை­கள் மண்டாயில் அடுத்த மாதம் திறக்கப்பட இருக்கும் ‘பேர்ட் பேர­டைஸ்’ எனப்படும் பறவைகள் மகிழ்வனத்துக்கு மாற்­றப்­பட்­டுள்­ளன.

எஞ்­சி­யுள்ள பற­வை­கள் வரும் வாரங்­களில் மாற்­றப்­பட உள்­ள­தாக மண்­டாய் வன­வி­லங்கு குழு­மம் நேற்று கூறி­யது.

இது தொடர்­பாக, குழு­மத்­தின் விலங்கு பரா­ம­ரிப்­புப் பிரி­வின் துணைத் தலை­வர் டாக்­டர் லுயிஸ் நீவ்ஸ் ‘ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழிடம் பேசி­னார்.

மூடப்­பட்ட ஜூரோங் பற­வைப் பூங்­கா­வி­லி­ருந்து மண்­டாய் புதிய பற­வைக்­கூ­டத்­திற்கு பற­வை­களை மாற்­றும் பணி இவ்­வாண்டு ஜன­வரி 4ஆம் தேதி முதல் நடை­பெற்று வரு­வ­தாக அப்­போது அவர் தெரி­வித்­தார்.

மண்டாய் பறவைகள் மகிழ்வனம் மே 8ஆம் தேதி திறக்கப்படுகிறது. பறவைகளை இடமாற்றம் செய்து இங்கு கொண்டு வரும் முடிவு இரண்டு அம்­சங்­க­ளின் அடிப்­ப­டை­யில் தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தாக அவர் கூறி­னார்.

மண்­டாய் பறவைகள் மகிழ்வனம் புதிய பற­வை­களை ஏற்­கத் தயா­ராக இருத்­தல், ஜூரோங் பற­வைப் பூங்­கா­வி­லி­ருந்து எந்­தப் பற­வை­களை முத­லில் இட­மாற்­றம் செய்­வது ஆகிய அம்­சங்­கள் அவை.

உதா­ர­ணத்­திற்கு, ஜூரோங்­கின் நீர்வீழ்ச்சி பற­வைக்­கூ­டத்­தில் இருந்த கறுப்­பு­நி­றக் கொண்டை கொக்­கு­கள் இரண்டு, பழைய பற­வைப் பூங்­கா­விற்­குள் பெரிய கூண்­டுக்கு இட­மாற்­றம் செய்­யப்­பட்­டன.

பிப்­ர­வரி மாதம் புதிய இடத்­திற்கு மாற்­றப்­படும் வரை அவை அந்­தக் கூண்­டில் வைக்­கப்­பட்டு இருந்­தன என்று டாக்­டர் நீவிஸ் விளக்­கி­னார்.

மாற்­றப்­ப­டு­வ­தற்கு முன்­னால் பற­வை­கள் பல­வற்­றை­யும் கலந்து மண்­டாய்க்கு அனுப்­பும் பணி­யில் ஜூரோங் பற­வைப் பூங்­கா­வின் பற­வைக் காப்­பா­ளர்­கள் ஈடு­பட்­ட­னர்.

ஒன்­றோ­டொன்று இணைந்து வாழக்­கூ­டிய பற­வை­கள் இனம் கண்டு அவற்றை அவர்­கள் புதிய இடத்­திற்கு மாற்­றி­னார்­கள்.

“கார­ணம், சில பற­வை­கள் சேர்ந்து வாழும் தன்­மை­யு­டை­யவை என்று நாம் நினைத்­தி­ருப்­போம். ஆனால், நடை­மு­றை­யில் அவை சேர்ந்து வாழா­த­வை­யாக இருக்­க­லாம்,” என்­றார் அவர்.

பொருந்­தாத தன்­மை­யி­னால், மண்­டாய் பறவைகள் மகிழ்வனத் துக்கு மாற்­றப்­படும் பற­வை­க­ளி­டையே ஏற்­ப­டக்­கூ­டிய மன­உ­ளைச்­ச­லைக் குறைக்க இந்த அணு­கு­முறை உத­வி­ய­தா­க­வும் அவர் கூறி­னார்.

அத்­து­டன், பற­வை­கள் தாங்­க­ளா­கவே கூண்­டுக்­குள் நுழைய பரா­ம­ரிப்­பா­ளர்­கள் பயிற்சி அளித்­தார்­கள்.

பற­வை­க­ளைப் பாது­காக்க முன்­னு­ரிமை அளிக்­கும் இட­மாற்ற அணு­கு­முறை இது. அதே­நே­ரம் உய­ர­மான கால்­கள் மற்­றும் நீண்ட கழுத்து உள்ள கொக்­கு­களும் பற­வை­க­ளும் வலை­க­ளுக்­குள் இருப்­பதை விரும்­பா­தவை.

எனவே கூண்­டுக்­குள் வைக்­கப்­படும் முன்­னர் அவற்­றுக்­கான வலை­கள் அகற்­றப்­பட்­டன. பற­வை­கள் தங்­க­ளைத் தாங்­களே காயப்­ப­டுத்­திக்­கொள்­வ­தைத் தவிர்க்­க­வும் பாது­காப்­பான, சுமு­க­மான இட­மாற்­றத்­திற்­கா­க­வும் இவ்­வாறு செய்­யப்­பட்­ட­தாக டாக்­டர் நீவ்ஸ் கூறி­னார்.

இட­மாற்­றத்­தின்­போது மருத்­துவ உதவி தேவைப்­படும் பற­வை­க­ளின் எண்­ணிக்கை பழைய பற­வைப் பூங்­கா­வில் வழக்­க­மான பரா­ம­ரிப்­பில் ஈடு­ப­டுத்­தப்­படும் எண்­ணிக்­கை­யி­லி­ருந்து பெரி­தாக உய­ர­வில்லை என்­றார் அவர்.

“பற­வை­க­ளுக்கு அதி­க­பட்ச பரா­ம­ரிப்பு அளிப்­பது பற்­றி­யும் இயன்­ற­வரை அவை காய­ம­டை­யா­மல் பார்த்­துக்­கொள்­ளப்­ப­டு­வது பற்­றி­யும் நாங்­கள் எப்­போ­தும் கவ­ன­மாக இருப்­போம்.

“பெரி­ய­தொரு பற­வைக்­கூட்­டம் என்­ப­தா­லும் அவற்­றுக்­குள்­ளும் சில நேரங்­களில் சண்டை ஏற்­படும் என்­ப­தா­லும் எங்­க­ளின் கவ­னம் அவற்­றின்­மீது இருக்­கும்,” என்­றார் டாக்­டர் நீவ்ஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!