ஆசியாவின் சிறந்த அறிவார்ந்த நகரமாக சிங்கப்பூர் தேர்வு

அறி­வார்ந்த நக­ரங்­க­ளுக்­கான தர­வ­ரி­சைப் பட்­டி­ய­லில் இவ்­வாண்டு சிங்­கப்­பூர் உலக அள­வில் 7வது இடத்­தை­யும் ஆசிய நக­ரங்­களில் முதல் இடத்­தை­யும் பிடித்­துள்­ளது.

உயர் வாழ்க்­கைத் தரத்தை எட்­டு­வ­தில் உள்ள சவால்­களை எதிர்­கொள்ள நக­ரங்­கள் தொழில்­நுட்­பத்தை எவ்­வாறு பயன்­ப­டுத்­தித் தீர்வு காண்­கின்­றன என்­ப­தன் அடிப்­ப­டை­யில் தர­வ­ரி­சைப்­ப­டுத்­தப்­பட்ட பட்­டி­யல் நேற்று வெளி­யி­டப்­பட்­டது.

சுவிட்­சர்­லாந்து வணி­கக் கழ­கத்­தின் நிர்­வாக மேம்­பாட்­டுக் கழ­கம் (ஐஎம்டி) வெளி­யிட்ட இந்­தப் பட்­டி­ய­லில் 141 நக­ரங்­கள் இடம்­பெற்று உள்­ளன.

சுவிட்­சர்­லாந்­தின் ஸுரிக் நக­ரம் முத­லி­டத்­தைப் பிடித்­துள்­ளது. நார்­வே­யின் ஓஸ்லோ இரண்­டா­மி­டத்­தை­யும் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் கேன்­பரா மூன்­றா­மி­டத்­தை­யும் பிடித்­துள்­ளன.

2020, 2021 ஆண்­டு­க­ளி­லும் உல­க­ள­வில் சிங்­கப்­பூர் ஏழாம் இடத்­தையே பிடித்­தி­ருந்­தது. சென்ற ஆண்டு அறி­வார்ந்த நக­ரங்­கள் பட்­டி­யல் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

வீட்டு விலை, போக்­கு­வ­ரத்து நெரி­சல், வேலை­வாய்ப்பு உள்­ளிட்ட 15 அம்­சங்­கள் குறித்து, அந்த 141 நக­ரங்­களில் ஏறக்­கு­றைய 20,000 பேரி­டம் கருத்­து­கள் சேக­ரிக்­கப்­பட்­டன.

ஆசிய அள­வில் முத­லி­டம் பிடித்­துள்ள சிங்­கப்­பூர், மருத்­து­வச் சேவை­கள், தர­மான கல்வி, பசு­மை­யான இடங்­கள் போன்ற அம்­சங்­களில் உயர்ந்த தர­நி­லை­யைப் பிடித்­தது.

பல்­வேறு கட்­ட­மைப்­பு­கள் மற்­றும் தொழில்­நுட்­பங்­கள் பற்­றி­யும் அவர்­க­ளி­டம் கேட்­கப்­பட்டது. முக அடையாள அங்­கீ­காரம், தனி­ந­பர் தர­வுப் பகிர்வு போன் அம்­சங்­களில் தொழில்­நுட்­பம் எந்த அள­வுக்­குக் கைகொ­டுக்கிறது என கேட்­கப்­பட்­டது.

2019ஆம் ஆண்டு முதல் தங்­க­ளது செயல்­பா­டு­களில் தொடர்ந்து முன்­னேற்­றம் கண்டு வரும் ஆறு நக­ரங்­களில் சிங்­கப் பூரும் ஒன்று என குறி­யீடு குறிப் பிட்­டுள்­ளது. ஸூரிக், ஓஸ்லோ, பெய்­ஜிங், சோல், ஹாங்­காங் ஆகி­யன இதர ஐந்து நக­ரங்­கள்.

ஆய்வு நடத்­தப்­பட்ட 141 நக­ரங்­களில் பட்­டி­ய­லின் முதல் 20 இடங்­களில் ஆசிய, ஐரோப்பிய நக­ரங்­களே முன்­னிலை வகிப்­ப­தாக இவ்­வாண்­டின் குறியீடு தெரி­வித்­துள்­ளது.

பொது­மக்­கள் பாது­காப்பு, இணை­யச் சேவை­யின் வேகம், நல்ல பள்­ளிக்­கூ­டங்­களில் குழந்­தை­களைச் சேர்­த்தல் போன்ற தலை­சி­றந்த அம்­சங்­கள் உள்­ளிட்ட பல­வற்­றில் சிங்­கப்­பூ­ரின் தரம் உயர்ந்­துள்­ள­தாக ஆய்­வில் பங்­கேற்­ற­வர்­கள் கருத்து தெரி­வித்­த­னர்.

ஒவ்­வொரு நக­ரத்­தி­லும் ஏறக்­கு­றைய 120 பேரி­டம் கருத்து திரட்­டப்­பட்­டது. அறி­வார்ந்த நக­ரங்­கள் என்­னும் தோற்­றம் மாறி­வ­ரு­வ­தாக ஐஎம்­டி­யின் அறி­வார்ந்த நக­ரத் தேர்வு கண்­கா­ணிப்­பா­ளர் டாக்­டர் புரூனோ லான்­வின் கூறி­னார்.

வெளிப்­ப­டைத்­தன்மை, புத்­தாக்­கம், அனை­வ­ரை­யும் அர­வ­ணைக்­கும் போக்கு மற்­றும் தாக்­குப்­பி­டிக்­கும் தன்­மைக்­கான முன்­னேற்­றத்­தைக் குறிக்­கும் ஓர் அம்­ச­மாக அறி­வார்ந்த நக­ரக் குறி­யீடு அமை­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

“புதிய உல­கம் உரு­வாகி வரு­கிறது. நக­ரங்­களில் நிகழ்ந்து வரும் மாற்­றங்­கள் எதிர்­கா­லத்­தில் நிக­ழக்­கூ­டி­ய­ வற்றை உணர்த்தும் அறி­குறி,” என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!