உண்ணுமிடங்களில் மிளிரும் சிங்கப்பூரர்களின் பொறுப்புணர்வு

1 mins read
6d64990b-2608-4e28-b5fd-d4a6277f2fd4
-

உண்­ணும் இடங்­க­ளைத் தூய்­மை­யாக வைத்­துக்­கொள்­வ­தில் சிங்­கப்­பூ­ரர்­கள் அதி­கப் பொறுப்­பு­டன் நடந்­து­கொள்­வது அண்­மைய ஆய்வு ஒன்­றின்­மூ­லம் தெரி­ய­வந்­துள்­ளது.

காப்­பிக்­க­டை­களில் அல்­லது உண­வங்­காடி நிலை­யங்­களில் உண்­ட­பின் உரிய இடத்­தில் தட்டு­க­ளைத் திரும்­பக் கொண்டு­போய் வைப்­ப­தா­கக் கடந்த ஆண்டு இடம்­பெற்ற கருத்­தாய்­வில் பங்­கேற்­றோ­ரில் 95 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­த­னர். முந்­திய 2021ஆம் ஆண்­டைக் காட்­டி­லும் இது 46% அதி­கம்.

உணவு உண்­ட­பின் தட்­டு­களைத் திரும்ப வைக்­கா­வி­டில் அப­ரா­தம் விதிக்­கும் முறை சென்ற ஆண்டு தொடக்­கத்­தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

ஆனா­லும், அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம் என்­ப­தனால் மட்­டு­மின்றி, தட்­டு­க­ளைத் திரும்ப வைப்­பது தங்­க­ளது பொறுப்பு என்­ப­தைப் பல­ரும் உணர்ந்­துள்­ள­னர். சமூ­கப் பொறுப்­பா­கக் கருதி, அவ்­வாறு தாங்­கள் செய்­வ­தாக 'பொதுத் தூய்மை மன­நி­றை­வுக் கருத்­தாய்வு 2022'ல் பங்­கேற்­றோ­ரில் 78.4 விழுக்­காட்­டி­னர் கூறி­னர்.

அத்­து­டன், உணவு மேசை­யைத் தூய்­மை­யாக வைத்­து இருப்­ப­தில் அதில் அமர்ந்து உண்­ப­வர்­க­ளுக்கே முதன்­மைப் பொறுப்பு என்­றும் 84 விழுக்­காட்­டி­னர் குறிப்­பிட்­ட­னர்.

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­கலைக்­க­ழ­கம் 5வது முறை­யாக நடத்திய இந்த ஆய்வில் 2,020 பேர் பங்­கெடுத்தனர்.