மரண தீ விபத்து: சிகரெட் நெருப்பே காரணமாக இருந்திருக்கலாம்

மரண தீ விபத்து: சிகரெட் நெருப்பே காரணமாக இருந்திருக்கலாம்

1 mins read
7b96fbda-8342-4d34-a797-0bb7e7da77ad
-

புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 21ல் உள்ள புளோக் 210A 13வது மாடி வீடு ஒன்றில் 2019ல் தீ விபத்து நிகழ்ந்தது. திருவாட்டி கோ சியாவ் வே என்ற 60 வயது மாது புகையைச் சுவாசித்ததால் மூச்சுத் திணறி மாண்டார்.

அந்த மரணம் பற்றிய விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடந்தது. முதல் நாள் விசாரணையில் காவல்துறை புலன்விசாரணை அதிகாரி ஸாமீர் கான் சாட்சியம் அளித்தார். தீ மூண்டதற்கு சிகரெட் நெருப்பே அநேகமாக காரணமாக இருக்கக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.