2023 முதல் 3 மாதங்களில் 2.9 மில்லியன் பயணிகள்

2023 முதல் 3 மாதங்களில் 2.9 மில்லியன் பயணிகள்

2 mins read
6c5d03d0-b72b-4ca0-9a55-aeafbfef38aa
-

கொவிட்-19 தொற்றுக்கு முந்திய பயணிகள் அளவில் மூன்றில் இரண்டு பங்கு

சுற்­றுலா தொழில்­துறை தொடர்ந்து மீட்சி கண்டு வரு­கிறது. இந்த நிலை­யில், சிங்­கப்­பூ­ருக்கு இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் 2.9 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட பய­ணி­கள் வந்­த­னர்.

இந்த எண்­ணிக்கை, கொவிட்-19க்கு முந்­திய எண்­ணிக்­கை­யில் ஏறத்­தாழ மூன்­றில் இரண்டு பங்­கா­கும்.

கடந்த 2019 முதல் காலாண்டில் சிங்­கப்­பூ­ருக்கு வந்த பய­ணி­களின் எண்­ணிக்கை 4.7 மில்­லி­யன். இந்த ஆண்டு முதல் மூன்று மாதங்­களில் இங்கு வந்த பய­ணி­க­ளின் அளவு, 2019ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் 62 விழுக்­கா­டாக இருக்­கிறது என்று சிங்­கப்­பூர் பய­ணத்துறைக் கழ­கம் நேற்று தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ருக்கு வந்த பய­ணி­களின் மொத்த எண்­ணிக்கை குறை­வாக இருந்­தா­லும் பய­ணி­கள் இங்கு தங்­கிய கால அளவு அதி­க­மாக இருந்­தது. 2019ல் அந்த அளவு சரா­ச­ரி­யாக 3.34 நாள்­க­ளாக இருந்­தன.

2023 முதல் மூன்று மாதங்­களில் பய­ணி­கள் இங்கு சரா­சரி­யாக 3.97 நாள்­கள் தங்­கினர்.

இவ்­வே­ளை­யில், சிங்­கப்­பூ­ரின் சுற்­று­லாத்­துறை எதிர்­காலத்தை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் கழகம், அந்­தத் துறை­யைச் சேர்ந்­த­வர்­க­ளு­டன் சேர்ந்து பாடு­பட்டு சிங்­கப்­பூ­ரில் உயர்­தர சுற்றுலாத் தலங்கள் இருப்­பதை உறுதி செய்­யும்.

சிங்­கப்­பூரைப் பற்­றிய மேலும் பல அம்­சங்­களை எடுத்­துக்­காட்டும் வகை­யில் கழ­க­மும் தக­வல் தொடர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­ய­மும் சேர்ந்து $10 மில்­லி­யன் நிதி ஒன்றைத் தொடங்­கு­கின்­றன.

சிங்­கப்­பூ­ரின் சிறப்பு அம்­சங்­களை வெளிச்­சம் போட்டுக் காட்டி அவற்றை சந்­தைப்­ப­டுத்­தும் வகை­யில் பொழு­து­போக்கு நிகழ்ச்­சி­களை உரு­வாக்­கு­வ­தற்கு அந்த நிதி ஆத­ரவு அளிக்­கும்.

வர்த்­தக, தொழில் துணை அமைச்­சர் ஆல்­வின் டான், நேற்று சன்­டெக் சிங்­கப்­பூர் மாநாட்டு கண்­காட்சி மையத்­தில் நடந்த பய­ணத்துறைக் கழக தொழில்­துறை மாநாட்­டில் பேசினார்.

அந்­தக் கூட்டு நிதி­யைக் கொண்டு சிங்­கப்­பூர் பின்­ன­ணி­யில் திரைப்­ப­டங்­களும் தொலைக்­காட்சித் தொடர்­களும் உரு­வாக ஊக்­கம் கிடைக்­கும் என்று நம்பு­வதாக திரு டான் குறிப்­பிட்­டார்.

அத்­த­கைய படைப்­பு­கள் அனைத்­து­லக ஊடக, பொழுது­போக்கு அமைப்­பு­களுடன் சேர்ந்து உரு­வாக்­கப்­படும்.

இதன்­மூ­லம் உள்­ளூர் வல்லு­நர்­கள், அனைத்­து­லக வல்­லு­நர்­க­ளு­டன் சேர்ந்து செயல்­பட வாய்ப்பு கிடைக்­கும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

புதிய சுற்­றுலா வாழ்க்­கைத் தொழில் இயக்­கம் ஒன்­றும் தொடங்­கப்­பட்டு இருக்­கிறது.

உள்­ளூர் மக்­கள் இந்­தத் தொழி­லில் சேர்­வ­தற்கு ஊக்­க­மூட்­டு­வது அதன் நோக்­கம்.

சுற்­று­லாத் துறை­யில் வேலை பார்ப்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை 2022 டிசம்­பர் நில­வ­ரப்­படி 66,000 ஆகக் கூடி­யது. இது கொவிட்-19க்கு முந்­தைய 2019ஆம் ஆண்டு நில­வ­ரத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் ஏறக்­கு­றைய 80 விழுக்­கா­டா­கும்.

இருந்­தா­லும், இந்­தத் தொழில்­து­றை­யில் பல­ரும் கடு­மை­யான ஊழி­யர் பற்­றாக்­குறை பிரச்­சினையை எதிர்­நோக்­கு­வ­தாக பய­ணத்துறை கழ­கத்­தின் தலைமை நிர்­வாகி கெய்த் டான் தெரிவித்தார்.