உலகின் பணக்காரர்களை உள்ளடக்கி இருக்கும் ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் 2023 பட்டியலில் சிங்கப்பூரைச் சேர்ந்த மேலும் பல செல்வந்தர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.
அந்தப் பட்டியலில் சென்ற ஆண்டில் 25 சிங்கப்பூரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இந்த ஆண்டில் அவர்களின் எண்ணிக்கை 35 ஆகக் கூடி இருக்கிறது. அவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு சென்ற ஆண்டில் US$106.7 பில்லியனாக இருந்தது. இது இந்த ஆண்டில் US$118.9 பில்லியன் (S$157.6 பில்லியன்) பில்லியனாகக் கூடியது.
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்று இருக்கும் பணக்கார சிங்கப்பூரர்களில் 'ஷென்ஸென் மைன்ட்ரே பயோ-மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ்' என்ற நிறுவனத் தலைவர் லி ஸிட்டிங்கும் ஒருவர். இவரது சொத்து மதிப்பு US$16.3 பில்லியனாக இருக்கிறது. இவரே உலகின் 103வது பெரும் பணக்காரர் என்று ஃபோர்ப்ஸ் வருடாந்திர அறிக்கை கூறுகிறது.