இறைச்சி சோதனைக்கு ஏற்பாடு செய்யாத முதலாளி

இறைச்சி சோதனைக்கு ஏற்பாடு செய்யாத முதலாளி

1 mins read
b25cb937-0e3a-44f5-8719-cd783711e7ee
-

இறக்­கு­மதி செய்­யப்­படும் உண­வுப் பொருள்­களை அதி­கா­ரி­கள் முறை­யாக சோத­னை­யிட்டு சான்­றி­தழ் வழங்­கு­வ­தற்கு ஏற்­பாடு செய்­யாத ஒரு நிறு­வ­னத்­துக்கு நேற்று 28,000 வெள்ளி அப­ரா­தம் விதிக்­கப்பட்­டது.

உணவு இறக்­கு­ம­தி­யா­ள­ரான ஓர்கா மார்க்­கெட்­டிங் ஜன­வரி, ஜூன் மாதங்­களில் ஆடு, மாட்டு இறைச்­சியை இறக்­கு­மதி செய்­தது.

இரண்டு சம்­ப­வங்­களில் அது பரி­சோ­த­னைக்கு ஏற்­பாடு செய்­ய­வில்லை என்று சிங்­கப்­பூர் உணவு அமைப்பு தெரி­வித்­தது.

இதற்­காக ஓர்கா நிறு­வ­னத்­துக்கு 15,000 வெள்­ளி­யும் அதன் இயக்­கு­நர் கிறிஸ்ட­ஃபர் ஜான் மோருக்கு 13,000 வெள்­ளி­யும் அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. சிங்­கப்­பூ­ரில் இறக்குமதி செய்யப்படும் மீன், இறைச்­சியை விற்­பனை செய்வதற்கு முன்பு முறை­யா­கச் சோத­னை­யிட்டு சான்­றி­தழ் பெறு­வது அவ­சி­யம் ­என்று அமைப்பு மீண்டும் நினைவூட்டியுள்ளது.