செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
aed7890b-c978-4bf4-be37-6129e482c1a2
-

மதுபோதையில் இருந்த பெண்ணை சீரழித்தவருக்கு சுமார் பத்தாண்டு சிறை

மதுபோதையில் இருந்த பெண்ணை வீட்டுக்கு அழைத்து செல்வதாகச் சொல்லி, அவரைப் பாலியல் வன்கொடு மைக்கு உட்படுத்திய 22 வயது இளையருக்கு நேற்று உயர் நீதிமன்றம் 9 ஆண்டுகள் 11 மாதங்கள் சிறைத் தண்டனையுடன் ஆறு பிரம்படிகளும் விதித்தது.

டெல்வின் நியோ கா கெங் எனும் அந்த இளையர் பல நண்பர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பினார். அவர் களில் ஒருவரான 18 வயது பெண் ஒருவர் மதுபோதை யில் இருந்தபோது 19 வயதாக இருந்த அந்த இளையர், பலவந்தமாக அந்தப் பெண்ணிடம் உறவு கொண்டார்.

2019, நவம்பர் 21ஆம் தேதி நிகழ்ந்த இக்குற்றத்தை ஒப்புக்கொண்ட டெல்வினுக்கு தண்டனை விதிப்பின்போது மேலும் 11 இதர குற்றச்சாட்டுகளும் கருத்தில் கொள்ளப் பட்டன.

டெல்வினுக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர் சுரேஷ் தாமோதரா, தமது கட்சிக்காரருக்கு 'கவனக் குறைவு ஹைபராக்டிவிட்டி' எனும் கோளாறு இருப்பதாக வும் அதனைக் கருத்தில் கொண்டு தண்டனையைக் குறைக்குமாறும் நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார். நீதிபதி அதனை நிராகரித்தார்.

நான்கு பெண்களிடம் பாலியல் குற்றங்கள் புரிந்தவருக்கு சீர்திருத்த பயிற்சி

தனது உறவுக்கார பெண்கள் இருவர் உட்பட நான்கு பெண்களிடம் பல்வேறு பாலியல் குற்றங்கள் புரிந்த 20 வயது ஆடவருக்கு நேற்று குறைந்தது ஓராண்டு சீர்திருத்த பயிற்சி தண்டனையாக விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, குற்றவாளியின் பெயரை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

2018ல் தனது பாலியல் குற்றச்செயல்களைத் தொடங்கிய அவர், குற்றச்செயல்களை தனது உறவினர் களிடம் புரிந்தார். 2021, மார்ச் மாதம் அவர் 15 வயது பெண்ணிடம் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டார். அதன் விளைவாக அந்தப் பெண் கர்ப்பமுற்றார் என்றாலும் அந்தக் குழந்தையின் தந்தை பெயர் நீதிமன்ற ஆவணங் களில் குறிப்பிடப்படவில்லை.

மற்றொரு சம்பவத்தில் அந்த ஆடவர், பிரேடல் எம்ஆர்டி நிலையத்தில் மின்படிக் கட்டுகளில் சென்று கொண்டிருந்த 16 வயது பெண்ணின் பாவடைக்குள் படம் எடுத்தார். அவர் அனைத்துக் குற்றங்களையும் ஒப்புக்கொண்டார்.

சீர்திருத்த பயிற்சியைத் தண்டனையாக பெறும் ஒருவருக்குக் கடுமையான உடற்பயிற்சி, அணிவகுப்பு, ஆலோசனை போன்றவை அளிக்கப்படும். குற்றவாளிக்கு நேற்று $50,000 பிணை வழங்கப்பட்டது. இம்மாதம் 25ஆம் தேதி அவர் தனது தண்டனையைத் தொடங்க அரசு நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.