சிங்பாஸ் பயனாளர் தரவுக்கான புதிய பாதுகாப்பு அம்சம்

சிங்பாஸ் பயனாளர் தரவுக்கான புதிய பாதுகாப்பு அம்சம்

2 mins read
ec39274a-7c25-44b2-8469-34a5a2cd742d
-

போலி வங்­கிக் கணக்கு திறப்­பது போன்ற பல்­வேறு மோச­டி­களுக்கு சிங்­பாஸ் அடை­யா­ளத்தை தவ­றா­கப் பயன்­படுத்து­வதைத் தடுக்­கும் வகை­யில் சம்­பந்­தப்­பட்ட அமைப்­பு­கள் களத்­தில் இறங்கி உள்­ளன.

தேவை ஏற்­பட்­டால், குற்­றச் செயல்­க­ளைத் தடுப்­ப­தற்­காக அல்­லது இணை­யப் பாது­காப்­புக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களைத் தடுப்­ப­தற்­காக சிங்­பாஸ் செய­லி­யால் சேக­ரிக்­கப்­படும் தரவு பயன்­ப­டுத்­தப்­ப­ட­லாம் என்று அறி­வார்ந்த தேசம், மின்­னி­லக்க அர­சாங்க அலு­வ­ல­கம் நேற்று தெரி­வித்­தது.

இது குறித்து சிங்­பாஸ் பய­னா­ளர்­க­ளுக்கு அந்­தச் செயலி மூலம் தெரி­விக்­கப்­பட்டுவிட்­டது.மோச­டிப் பேர்­வ­ழி­கள் சிங்­பாஸ் விவ­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்தி, பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் மத்­திய சேம­நி­திக் கணக்­கி­லி­ருந்து பணம் எடுப்­பது அல்­லது வங்­கிக் கணக்­கு­கள் திறப்­பது போன்ற பல்­வேறு இணைய மோச­டி­களைத் தடுத்து நிறுத்த இந்த புதிய மாற்­றங்­கள் உத­வும் என்று அறி­வார்ந்த தேசம், மின்­னி­லக்க அர­சாங்க அலு­வ­ல­கத்­தின் செய்­தித் தொடர்­பா­ளர் தெரி­வித்­தார்.

மோசடி நட­வ­டிக்­கை­கள் பற்றி தெரி­ய­வ­ரும்­போது, அது எந்த நேரத்­தில் நடந்­தது போன்ற முக்­கியத் தக­வலை சிங்­பாஸ், காவல்­துறை, மத்­திய சேம­நி­திக் கழ­கம், வங்­கி­கள் தெரி­விப்­ப­தன் மூலம் அந்த மோசடி உட­ன­டி­யா­கக் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு தடுக்­கப்­படும் என்­றார் அந்­தப் பேச்­சா­ளர்.

"தேவை ஏற்­பட்­டால், சிங்­பாஸ் குழு, பய­னா­ள­ரைப் பாது­காக்­கும் பொருட்டு அவ­ரது சிங்­பாஸ் கணக்­கைத் தற்­கா­லி­க­மாக நிறுத்தி, அது­பற்றி அவ­ருக்­குத் தெரி­யப்­ப­டுத்­தும்.

"சிங்­பாஸ் தொடர்­பான ஆகக் கடைசி விவ­ரங்­கள், டிரேஸ்டு கெதர் செய­லி­யு­டன் இணைக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. ஆக, அது இடம் பற்றிய தரவை சேக­ரிக்­காது. மாறாக, அது அதைப் பயன்­படுத்­து­ப­வ­ரின் ஐபி முக­வ­ரியை மட்­டும் கண்­கா­ணிக்­கும். அந்­தச் செயல்பாடு உள்­ளூ­ரில் நடத்­தப்­பட்­டதா வெளி­யூ­ரில் நடத்­தப்­பட்­டதா என்­பதை அது நிர்­ண­யிக்­கும். அதன் மூலம் பய­னா­ளர் சிங்­பா­ஸின் வெளி­நாட்­டுப் பயன்­பாட்­டைத் தடுக்­க­லாம்," என்­றும் பேச்­சா­ளர் மேலும் விளக்­கி­னார்.

டிரேஸ்டுகெதர் செய­லி­யில் தரவு சேக­ரிப்பு தொடர்­பில் 2021ல் பெரும் சர்ச்சை கிளம்­பி­யது. பய­னா­ளர் எங்கு இருக்­கி­றார் எனும் தரவு குற்­ற­வி­யல் புல­னாய்­வுக்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­ட­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டது. அது கொவிட்-19 தொடர்­பு­க­ளின் தடங்­க­ளைக் கண்­ட­றி­த­லுக்கு மட்­டும்­தான் பயன்­ப­டுத்­தப்­படும் என்று முன்­ன­தா­கக் கூறப்­பட்­டது. தொடர்­பு­க­ளின் தடங்­க­ளைக் கண்­ட­றி­தல் தளர்த்­தப்­பட்­ட­தால் அது இவ்­வாண்டு பிப்­ர­வ­ரி­யில் நிறுத்­தப்­பட்­டது.

சிங்­பா­ஸைத் தவ­றா­கப் பயன்­படுத்­து­வதை நிறுத்­த­வும் தங்­கள் சிங்­பாஸ் விவ­ரங்­களை மோச­டிப் பேர்­வ­ழி­க­ளி­டம் பய­னா­ளர்­கள் விற்­ப­தைத் தடுக்­க­வும் சிங்­பாஸ் முறை­யில் மாற்­றங்­கள் கொண்டு வரப்­பட்­டன என்று சம்­பந்­தப்­பட்ட அமைப்­பு­கள் தெரி­வித்­தன.

சிங்­பாஸை இங்கு குறைந்­தது நான்கு மில்­லி­யன் பேர் அல்­லது உள்­ளூர்­வா­சி­கள், நிரந்­த­ர­வா­சி­களில் 97 விழுக்­காட்­டி­னர் பயன்­ப­டுத்­து­கி­றார்­கள் என்று அச்­செ­ய­லி­யின் மேம்­பாட்­டா­ளர்­கள் கூறி­னர். அதன் மூலம் ஆண்­டுக்­கும் குறைந்­தது 300 மில்­லி­யன் பரி­வர்த்­த­னை­கள் அர­சாங்­கம் வழங்­கும் மின்­னி­லக்க சேவை­க­ளுக்­கும் அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்ட தனி­யார் அமைப்­பு­க­ளின் சேவை­க­ளுக்­கும் மேற்­கொள்­ளப்­படு­கின்­றன.

முன்­கட்­ட­ணம் செலுத்­தப்­பட்ட உள்­ளூர் கைப்­பேசி எண்­க­ளுக்­கான சிம் அட்­டை­க­ளுக்­குப் பதிவு செய்­வ­தற்­கும் சிங்­பாஸ் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்று அறி­யப்­படுகிறது. அதை கொண்டு மோச­டிக்­கா­ரர்­கள் +65 என்ற எண்­ணு­டன் தொடங்­கும் எண்­ணைப் பயன்­ப­டுத்தி மோசடி அழைப்­பு­களை மேற்­கொள்­ள­லாம். இத்­த­கைய மோசடி எண்­களி­லி­ருந்து வரும் அழைப்­பு­களை எடுக்க வேண்­டாம் என்று காவல்­துறை ஆலோ­சனை கூறு­கிறது.