நான்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் புதிய முயற்சி

நான்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் புதிய முயற்சி

2 mins read
97e99d10-5990-4b30-910a-dabdee247f0b
-

இணைய மோச­டிச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­து­வ­ரும் வேளை­யில், அகண்ட அலைவரிசைக் கட்­ட­மைப்­பில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­கும் வடிப்­பான்­க­ளின் உத­வி­யோடு, தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னங்­கள் இணை­யக் குற்­ற­வா­ளி­கள் பயன்­ப­டுத்­தும் தீங்­கு­நி­ரல்­க­ளைக் கண்­டு­பி­டித்து வரு­கின்­றன.

அலு­வ­ல­கங்­களில் அல்­லது இல்­லங்­களில் இணை­யம் மூலம் இணைக்­கப்­பட்ட மடிக்­க­ணி­னி­கள், கைப்­பே­சி­கள், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புச் சாத­னங்­கள் முத­லிய தொலைத்­தொ­டர்­புச் சாத­னங்­களில் உள்ள முக்­கி­ய­மான தரவு, இணைய ஊடு­ரு­வி­களின் கைகளில் சிக்­கிக்­கொள்­வ­தைத் தடுக்­கும் விதத்­தில் இந்த அகண்ட அலைவரிசை வடிப்­பான்­கள் காவல்­கா­ர­னா­கச் செயல்­ப­டு­கின்­றன.

அகண்ட அலைவரிசைப் பாது­காப்பு வழங்­கும் முத­லா­வது தொலைத்­தொ­டர்பு நிறு­வ­ன­மாக சிங்­டெல் விளங்­கு­கிறது. அது வசூ­லிக்­கும் மாதக் கட்­ட­ணத்­துக்கு தீங்­கு­நி­ரல்­க­ளுக்கு எதி­ரான முதல்­நிலை பாது­காப்பு அர­ணா­கத் திகழ்­கிறது.

இந்த வடிப்­பான்­கள் பொது­வாக தடை செய்­யப்­பட்ட பட்­டி­ய­லில் உள்ள தளங்­க­ளை­யும் தொடர்­பு­க­ளை­யும் தடுக்­கின்­றன. அத­னைத் தடுக்க அவை முத­லில் தொலைத்­தொ­டர்பு நிறு­வனத்­தின் தர­வுத்­த­ளத்­தில் இடம்­பெற்­றி­ருக்க வேண்­டும்.

இந்­தத் தளங்­க­ளுக்­குள் நுழை­வோர் தீங்கு விளை­விக்­கும் உள்­ள­டக்­கம் அல்­லது இணைய கிரு­மி­கள், தீங்­கு­நி­ரல் தங்­கள் அலு­வ­ல­கங்­களில் அல்­லது இல்­லங்­களில் உள்ள வர்த்­த­கக் கட்­ட­மைப்­பு­களில் இணை­யத் தாக்கு­ தல் ஏற்­பட வழி ஏற்­ப­டுத்­தித் தரு­கி­றார்­கள்.

இவ்­வாண்டு பிப்­ர­வ­ரி­யில் அறி­மு­க­மான சிங்­டெல்­லின் 'புரோட்­பேண்ட் புரோ­டெக்ட்' எனும் அகண்ட அலைவரிசைப் பாது­காப்பு அம்­சம் பய­னா­ள­ரின் இணைய போக்­கு­வ­ரத்­தில் உள்ள தீங்­கு­நி­ரல்­களை அடை­யா­ளம் கண்டு தடுத்து நிறுத்­தும்.

பெரும்­பா­லும் வர்த்­த­கங்­களை மைய­மா­கக்கொண்டு செயல்­படும் எம்1 நிறு­வ­னத்­தின் 'டைன­மிக் ஃபைபர் புரோ­டெக்ட்' எனும் அம்­சம் தீங்கு விளை­விக்­கும் உள்­ள­டக்­கம், தீங்­கு­நி­ரல் ஆகி­ய­வற்றைத் தடுக்­கும்.

'செக்­கி­யோர்­நெட்' எனப்­படும் தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னம் இவ்­வட்­டா­ரத்­தில் முதல் முறை­யாக பய­னீட்­டா­ள­ருக்­கான அகண்ட அலைவரிசைப் பாது­காப்பு அம்­சத்தை அறி­மு­கப்­படுத்­தி­யது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

'செக்­கி­யோர்­நெட்' அம்­சத்­துக்கு, இணை­யக் கிரு­மி­க­ளைக் கண்­டு­பி­டித்து, மிரட்­டல்­க­ளைத் தடுப்­பது, பய­னா­ள­ரின் அனு­மதி­யின்றி அவ­ரது தர­வு­க­ளைச் சேக­ரிக்­கும் உள­வு­நி­ர­லைக் கண்டு­பி­டிப்­பது, இணை­யத் தாக்­கு­தல் நடக்­கக்­கூ­டும் என்று பய­னா­ளரை எச்­ச­ரிப்­பது என மூன்று முக்­கிய செயல்­பா­டு­கள் உள்­ளன.

ஸ்டார்­ஹப் நிறு­வ­னம் அகண்ட அலைவரிசை வடிப்­பான் சேவையை வழங்­கு­வ தில்லை. மாறாக, அது சைபர்­புரோ­டெக்ட் எனப்­படும் 'விபி­என்' மெய்­நி­கர் தனி­யார் கட்­ட­மைப்பு சேவையை வழங்­கு­கிறது. அது ஆறு தொலைத்­தொ­டர்­புச் சாத­னங்­களில் இணைய மிரட்­டல்­களைத் தடுத்து நிறுத்­துவதுடன் தீங்கு விளை­விக்­கும் தளங்­க­ளுக்கு பிள்­ளை­கள் செல்­லா­மல் தடுப்­ப­தற்­கான பெற்­றோர் கட்­டுப்­பாட்­டை­யும் அளிக்­கிறது.