கடைக்குள் புகுந்து $46,000 மதிப்புள்ள ரொக்கம், சிகரெட்டுகளைத் திருடியவர் கைது

1 mins read
975d7eab-2abc-421b-b3e5-a5e2d6d32be9
-

ஜூரோங் ஈஸ்ட்­டில் உள்ள ஒரு கடை­யில் அத்­து­மீறி புகுந்து திரு­டி­னார் என்ற சந்­தே­கத்­தின் பேரில் 43 வயது ஆட­வர் ஒரு­வர் நேற்று கைது செய்­யப்­பட்­டார்.

ஜூரோங் ஈஸ்ட் ஸ்தி­ரீட் 24ல் உள்ள ஒரு கடை­யில் பொருள்­கள் திரு­டப்­பட்­டி­ருப்­பது குறித்து காவல்­து­றைக்கு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பிற்­ப­கல் 1.30 மணிக்கு தக­வல் கிடைத்­தது.

$40,000 ரொக்­கம், $6,000 மதிப்­புள்ள சிக­ரெட்­டு­கள் கடை­யி­லி­ருந்து திரு­டப்­பட்­டன என்று காவல்­துறை நேற்று தெரி­வித்­தது.

பல­ரி­டம் நடத்­தப்­பட்ட விசா ரணை மூல­மும் காவல்­துறை கண்­கா­ணிப்பு கேம­ரா­வில் பதி­வான காட்­சி­கள் மூல­மும் கிள­மெண்டி காவல்­துறை தலை­மை­யக அதி­கா­ரி­கள் திரு­டிய ஆட­வ­ரின் அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்தி அவரை நேற்று கைது செய்­த­னர்.

அந்த ஆட­வர் மீது அத்­து­மீறி நுழைந்து, திரு­டிய குற்­றம் சாட்­டப்­படும். குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் அவ­ருக்கு 10 ஆண்­டு­கள் வரை­யி­லான சிறை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.

சொத்­தின் உரி­மை­யா­ளர்­கள் தங்­கள் இடங்­க­ளின் கத­வு­கள், சன்­னல்­கள், உரு­ளைக் கத­வு­கள் முத­லி­ய­வற்றை உறுதியான பூட்டு ­க­ளைக் கொண்டு பூட்­டி­வைக்­க வேண்டும். தங்­கள் இடங்­களில் பெரிய அள­வி­லான ரொக்கம், நகை­கள், மதிப்­புள்ள பொருள்­கள் முத­லி­ய­வற்றை வைக்க வேண்­டாம் என்­றும் காவல்­துறை ஆலோ­சனை கூறு­கிறது.