தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கிட் பாத்தோக் பிடிஓ கட்டுமானப் பணி: தாமதத்திற்கான காரணம் பற்றி விளக்கம்

1 mins read
2d5802da-69dd-40ed-a81e-a8fe1f1abf91
-

புக்­கிட் பாத்­தோக்­கில் பிடிஓ வீடு­கள் கட்­டப்­படும் இடத்­தில் மண்ணைக் கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டிய நட­வ­டிக்­கை­களில் தாம­தம் ஏற்­பட்டது.

இதற்கு அந்த நிலப்பகு­தி­யும் கட்­டு­மா­னச் சாத­னங்­களைக் கொண்டு செல்வதில் ஏற்பட்ட பிரச்­சி­னை­களும் கார­ணம் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சும் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­க­மும் விளக்கி இருக்­கின்­றன.

பூமியில் வேலை­கள் தொடங்குவ­தற்கு முன்­ன­தாக மண்­ணைக் கட்­டு­ப்ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களைச் செய்­து­விட வேண்­டும் என்­பதே இந்­தத் தொழில்­து­றை­யின் பொது­வா­ன நடை­மு­றை­யா­கும்.

புக்­கிட் பாத்­தோக் ஹில்­சைட் பார்க்­கில் பிடிஓ வீடு­கள் கட்­டப்­படும் இடத்­தில் அத்­த­கைய பணி­கள், அந்­தப் பகு­தி­யின் நிலத்­தின் தன்மை கார­ண­மாக கட்­டம் கட்­ட­மாக இடம்­பெ­று­கின்­றன என்று அவை கூறின. அந்­த இடத்­தின் சில பகு­தி­களில் பிப்­ர­வரி 7ஆம் தேதி பணி­கள் தொடங்கின.

ஒப்­பந்­தக்­கா­ரர்­களால் சில பள்ளங்களைக் குறித்த காலத்­தில் நிரப்ப முடி­ய­வில்லை. இதற்கு அங்கு கட்­டு­மா­னச் சாத­னங்­களைக் கொண்டு செல்­வதில் தற்­கா­லிக பிரச்­சி­னை­கள் ஏற்­பட்டதே கார­ணம்.

என்­றா­லும் அவற்­றுக்­கெல்­லாம் தீர்வு காணப்­பட்டு பள்ளங்கள் அனைத்­தும் சுற்­றுச்­சூ­ழ­லுக்­குப் பாதிப்பு விளை­விக்­காத மண்­ணு­டன் கலந்து மக்­கி­வி­டும் பொருள்­க­ளால் நிரப்­பப்­பட்­டு­விட்­ட­தாக அறிக்கை கூறி­யது.