ஐநா அமைப்புக்கு சிங்கப்பூரரின் பெயர் முதல்முறை பரிந்துரை

ஐநா அமைப்புக்கு சிங்கப்பூரரின் பெயர் முதல்முறை பரிந்துரை

2 mins read
dc329ca4-e54e-4400-9ff8-9a7652f6631c
-

ஐநா­வின் உயர்­மட்ட பரு­வ­நிலை அறி­வி­யல் அமைப்­புக்கு முதல் முறை­யாக சிங்­கப்­பூ­ரர் ஒரு­வ­ரின் பெயர் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளது.

'ஐபி­சிசி' எனப்­படும் அர­சாங்­கங்­க­ளுக்கு இடை­யி­லான பரு­வ­நிலை அறி­வி­யல் அமைப்­பில் இணைத் தலை­வ­ரா­கப் பணி­யாற்ற சிங்­கப்­பூ­ரின் இணைப் பேரா­சி­ரி­யர் வின்ஸ்­டன் சோவின் பெயர் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

அறி­வி­யல் அடிப்­ப­டை­யி­லான பரு­வ­நிலை மாற்­றம், அதன் தாக்­கம், எதிர்­கால ஆபத்­து­கள், நாடு­கள் கரிம வெளி­யேற்­றத்தை குறைப்­ப­தற்­கான வழி­கள், அவற்றை அம­லாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் உள்­ளிட்ட அறிக்­கை­களை ஐபி­சிசி தொடர்ந்து வெளி­யிட்டு வரு­கிறது.

இது, பரு­வ­நிலை தொடர்­பான கொள்­கை­களை வகுக்­க­வும் பரு­வ­நிலை மாற்­றம் தொடர்­பான ஐநா கட்­ட­மைப்பு மாநாட்­டின் கீழ் உல­க­ளா­விய பரு­வ­நிலை மாற்­றத்­தின் நட­வ­டிக்­கைக்கு பங்­காற்­ற­வும் அர­சாங்­கங்­க­ளுக்கு உத­வும்.

வள­ரும் நாட்­டுக்­கான இணைத் தலை­வர் பதவி என்ற பொறுப்­புக்கு பேரா­சி­ரி­யர் சோவ்­வின் பெயர் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது.

அப்­ப­த­வி­யில் அவர் இவ்­வாண்டு ஜூலை­யில் தொடங்­கும் 'ஏஆர்7' எனும் ஏழா­வது மதிப்­பீட்டு அறிக்­கைக்கு முக்­கிய பங்­காற்­று­வார். பரு­நிலை மாற்­றத்­தின் தாக்­கங்­கள், அதனை ஏற்றுக்­கொள்­ளும் வழி­கள் மற்­றும் பாதிப்­பு­களில் இந்த அறிக்கை கவ­னம் செலுத்­தும்.

ஐபி­சி­சி­யில் 34 உறுப்­பி­னர்­கள் இடம்­பெற்­றுள்­ள­னர். இவர்­கள், ஐபி­சி­சி­யின் மதிப்­பீ­டு­களில் அறி­வி­யல் மற்­றும் தொழில்­நுட்ப அம்­சங்­களில் வழி­காட்­டு­வார்­கள். அதன் தொடர்­பான பிரச்­சி­னை ­க­ளுக்கு ஆலோ­ச­னை­களை வழங்­கு­வார்­கள்.

"இத்­து­றை­யில் நன்கு அனு ­ப­வம் பெற்­றுள்ள பேரா­சி­ரி­யர் சோவ், பரு­வ­நிலை மாற்ற அறி­வி­யலை மேம்­ப­டுத்­து­வ­தற்­கும் அர­சாங்­கங்­களும் சமூ­கங்­களும் பரு­வ­நிலை அபா­யங்­களை எவ்­வாறு திறம்­பட சமா­ளிக்­க­லாம் என்­ப­தற்­கான நடை­முறை பரிந்­து­ரை­களை வடி­வ­மைக்­க­வும் தகுதி பெற்­ற­வர்," என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்சு தெரி­வித்­தது.

ஐபி­சிசி 'ஏஆர்7' மதிப்­பீட்­டில் நக­ரங்­கள் மற்­றும் பரு­வ­நிலை மாற்­றம் குறித்த சிறப்பு அறிக்­கை­யைச் சேர்க்க முடிவு செய்­யப் பட்­டுள்­ளதை சுட்­டிக்­காட்­டிய அமைச்சு, இதில்­தான் அவர் அதிக ஆராய்ச்சி மற்­றும் களப்­ப­ணி­க­ளைச் செய்­துள்­ளார்." என்­பதை நினை­வூட்­டி­யது.

பேரா­சி­ரி­யர் சோவ், சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக் கழ­கத்­தில் நகர்ப்­புற பரு­வ­நிலை துறை­யில் இணைப் பேரா­சி­ரி­ய­ராக இருந்து வரு­கி­றார்.

ஐபி­பி­சி­யின் அறிக்கை களுக்கு அவர் பங்­காற்­றி­யுள்­ளார்.

சிங்­கப்­பூ­ரில் நகர்ப்­புற வெப்­பப் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காண பல்­வேறு ஆய்­வுக் குழுக்­கள் இணைந்து செயல்­படும் சிங்­கப்­பூரை குளிர்­விக்­கும் முயற்­சிக்கு 2017ஆம் ஆண்டு முதல் அவர் தலைமை தாங்கி வரு­கி­றார்.