அன்பளிப்புப் பைகள்: மோசடி என ஃபேர்பிரைஸ் எச்சரிக்கை

அன்பளிப்புப் பைகள்: மோசடி என ஃபேர்பிரைஸ் எச்சரிக்கை

1 mins read
688175b8-e71a-40d7-b529-ce1d91d6bd15
-

ஃபேர்பி­ரைஸ் நிறு­வ­னத்­தின் 50வது ஆண்டு கொண்­டாட்­டத்தை­யொட்டி அன்­ப­ளிப்­புப் பைகள் கொடுக்­கப்­ப­டு­வ­தாக சமூக ஊட­கத்­தில் பல பதிவுகளும் பல செய்திப் பக்­கங்­களும் இடம்­பெற்று வரு­கின்­றன.

ஆனால், அவை எல்­லாம் மோசடி வேலை என்று ஃபேர்பிரைஸ் நிறு­வ­னம் தெரி­வித்து இருக்­கிறது.

அப்­படி எந்­த­வொரு அன்­ப­ளிப்­புப் பையை­யும் ஃபேர்பிரைஸ் கொடுக்­க­வும் இல்லை, அங்­கீ­க­ரிக்­க­வும் இல்லை என்று ஃபேஸ்புக்­கில் அந்த நிறு­வ­னம் தெரி­வித்­தது.

'என்­டி­யுசி ஃபேர்பி­ரைஸ் ஃபேன்ஸ்' என்ற ஃபேஸ்புக் பதிவு நேற்­றுக் காலை வெளி­யா­னது.

அந்த ஃபேஸ்புக் பக்­கத்­தில் கருத்து தெரி­விக்­கும் பகு­தி­யில் புத்­தாண்டு வாழ்த்­துக்­கள் என்று எழுதி அனுப்­பு­வோ­ருக்கு 500 அன்­ப­ளிப்­புப் பைகள் கிடைக்கும் என அப்பதிவு கூறி­யது.

அன்­ப­ளிப்­புப் பையைப் பெற வேண்­டு­மா­னால் ஓர் இணைப்­பைப் பயன்­ப­டுத்தி பய­னீட்­டா­ளர்­கள் தங்­க­ளைப் பதிய வேண்டும் என்­றும் கேட்­டுக்­கொள்­ளப்­பட்டது.

இத­னி­டையே, நேற்று மாலை 6 மணி­ய­ள­வில் 1,300க்கும் மேற்­பட்­ட­வர்­கள் அந்­தப் பக்­கத்­தில் கருத்து தெரி­வித்து இருந்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்டது.

அந்த மோசடி பற்றி கருத்து கூறிய ஃபேர்பி­ரைஸ், வாச­கர்­கள் தங்­க­ளுக்குக் கிடைக்­கும் தக­வல்­களை எல்­லாம் சரி­பார்த்து செயல்­பட வேண்­டும்.

அதற்கு முன்­ன­தாக சொந்­தத் தக­வல்­களைத் தெரி­விக்­கக் கூடாது என்று கூறியது.

ஏதா­வது விளம்­ப­ரங்­களைத் தான் மேற்­கொண்­டால் அதுபற்றி தனது அதி­கா­ர­பூர்வ இணை­யத் தளத்­தி­லும் சமூக ஊட­கத்­தி­லும் மட்­டும் தக­வல்­கள் வெளி­யா­கும் என்றும் ஃபேர்பி­ரைஸ் தெரி­வித்தது.