என்டியுசி ஃபேர்பிரைஸ் நிறுவனம் திரு ஜஹபர் சாலே, 36, அவரின் மனைவி ஃபாரா நடியா, 35, இருவரிடத்திலும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு இருக்கிறது.
ரமலான் மாதத்தின்போது இஸ்லாமிய வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கப்படும் அன்பளிப்பு தின்பண்டங்கள் மலாய்க்காரர்களுக்கு மட்டும் என்று ஃபேர்பிரைசின் ஊழியர் ஒருவர் வலியுறுத்திக் கூறியதை அடுத்து அந்த நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
இதுபற்றி அந்தத் தம்பதியர் தன்னிடம் தெரிவித்ததாக சிஎன்ஏ நேற்று கூறியது.
திரு ஜஹபர் இந்தியர். அவரின் மனைவி இந்திய மலாய்க்காரர்.

