ஊழல்: 38 மாதங்கள் சிறை

1 mins read
d6a73274-76a6-4956-9f7d-4097d21a77bb
-

ஃபேர்பி­ரைஸ் நிறு­வ­னத்­தின் முன்­னாள் அணித் தலை­வர், பொருள்­களை வழங்­கும் பல­ரி­டம் இருந்து $523,000 லஞ்­சம் பெற்­றார். அவருக்கு நேற்று மூன்­றாண்டு மற்­றும் இரண்டு மாதம் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

தன்­னு­டைய சகா ஒரு­வ­ரு­டன் சேர்ந்து இந்­தக் குற்­றச்­செ­யலை இவர் செய்­தார். சீ ஹோக் லாம், 70, என்ற இந்த நப­ர், $261,500 தொகையைச் செலுத்த வேண்­டும் என்­றும் உத்­த­ர­வி­டப்­பட்­டது.

இல்லை என்­றால் கூடு­த­லாக 523 நாள்­கள் இவர் சிறை­யில் இருக்க வேண்­டும்.

முன்­ன­தாக இந்த நபர் 10 ஊழல் குற்­றச்­சாட்­டு­க­ளின் பேரில் குற்­றத்தை ஒப்­புக்­கொண்டு இருந்­தார்.

இவ­ரு­டைய உடந்­தை­யா­ன லிம் கியான் கோக், 48, என்­ப­வர், ஃபேர்பி­ரைஸ் பேரங்­காடி கடை­யில் மூத்த அணித் தலை­வ­ராக இருந்­தார்.

அவர் 12 ஊழல் குற்­றச்­சாட்டு­க­ளின் பேரில் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார். அவ­ருக்கு மார்ச் 31ஆம் தேதி நான்­காண்­டு­கள் மற்­றும் ஐந்து மாதம் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

ஏறக்­கு­றைய $290,000 தொகையை லிம் செலுத்த வேண்­டும் என்­றும் உத்­த­ர­வி­டப்­பட்­டது. இல்லை என்­றால் கூடு­த­லாக 580 நாள்­கள் அவர் சிறைத்­தண்­ட­னையை அனு­ப­விக்க வேண்­டும்.