எஃப்1 பந்தயம்: ஹோட்டல் அறைகள் முன்பதிவு மும்முரம்

1 mins read
a55d67c6-4cd4-45ec-8b0e-48e6e652691e
செப்­டம்­பர் 15 முதல் 17ஆம் தேதி வரை­யி­லான வார­யி­று­தி­யில் எஃப்1 நடை­பெ­ற­வி­ருக்­கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

எஃப்1 கார் பந்­த­யம் நடை­பெ­று­வதற்கு இன்­னும் ஐந்து மாதங்­கள் உள்­ளன. ஆனால், பந்­த­யம் நடை­பெ­றும் மரினா பே வட்­டா­ரத்­தில் அமைந்­துள்ள சில ஹோட்­டல்­களுக்கு ஏற்­கெ­னவே முன்­ப­தி­வு­கள் தொடங்­கி­விட்­டன.

கடந்த ஆண்­டின் பந்­த­யத்­துக்குப் பிறகு பல நாடு­களும் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தி­யுள்ள வேளை­யில், இவ்வாண்­டின் பந்­த­யத்தை முன்­னிட்டு நக­ரின் மையப் பகு­தி­யில் உள்ள ஹோட்­டல்­கள் பல­வும் விருந்­தி­னர்­க­ளால் நிரம்பி வழி­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

செப்­டம்­பர் 15 முதல் 17ஆம் தேதி வரை­யி­லான வார­யி­று­தி­யில் எஃப்1 நடை­பெ­ற­வி­ருக்­கிறது.

இப்­போதே முன்­ப­தி­வு­க­ளைப் பெறத் தொடங்­கி­விட்ட ஹோட்­டல்­களில் தி ஃபுல்லர்­டன் ஹோட்­டல் சிங்­கப்­பூ­ரும் ஒன்று. பந்­த­யத் தடத்தை அரு­கி­லி­ருந்து காணும் வச­தியை இந்த ஹோட்­டல் கொண்­டுள்­ளது.

சீனா­வும் ஹாங்­காங்­கும் கொவிட்-19 எல்­லைக் கட்­டுப்­பாடு­க­ளைத் தளர்த்­தி­யுள்­ள­தால், அங்­கி­ருந்து அதி­க­மா­னோர் இங்கு எஃப்1 பந்­த­யத்­தைக் காண வரக்­கூ­டும் என்று தி ஃபுல்லர்­டன் ஹோட்­டல் அண்ட் ரிசோர்ட்சின் பொது மேலா­ளர் ஜினோ டான் கூறி­னார்.

பந்­த­யத் தடத்தை ஒட்­டி­யுள்ள கிட்­டத்­தட்ட அனைத்து ஹோட்­டல் அறை­களும் முன்­ப­திவு செய்­யப்­பட்­டு­விட்­ட­தாக சுவி­சோட்­டல் தெரி­வித்­தது. கடந்த ஆண்­டின் எஃப்1 பந்­த­யம் முடிந்த கையு­டன் இவ்­வாண்­டின் பந்­த­யத்­துக்­கான முன்­ப­தி­வு­களை தாங்­கள் பெறத் தொடங்­கி­விட்­ட­தாக தி ஃபுல்லர்­டன், சுவி­சோட்­டல் இரண்­டும் குறிப்­பிட்­டன.

பான் பசி­பிக் ஹோட்­டல் அறை­க­ளுக்­கும் வலு­வான தேவை நில­வு­கிறது. அதன் அறை­களில் பாதி­க்கும் மேலா­னவை முன்­ப­திவு செய்­யப்­பட்­டு­விட்­டன.

பந்­த­யம் நடை­பெ­றும் நாள்­களில் ஓர் இர­வுக்­கான ஹோட்­டல் அறை வாட­கைக் கட்­ட­ணம் $1,000க்கு­மேல் இருப்­ப­தாக பயண இணை­யத்­த­ளங்­கள் குறிப்­பி­டு­கின்­றன.