அரியவகை நோய்க்கான நிதி: ஒன்பது நோயாளிகளுக்கு உதவி

2 mins read
9820bd96-ce6e-41da-b8a8-10dcff245f4e
-

சிங்­கப்­பூ­ரில் அரி­ய­வகை நோய்­கள் உடைய 2,000 முதல் 3,000 பேரில் வெறும் ஒன்­பது சிங்­கப்­பூரர்­க­ளுக்கு (0.4%) அரி­ய­வகை நோய்­க­ளுக்­கான நிதி­யி­லி­ருந்து உதவி கிடைத்­துள்­ளது. 2019ல் அந்த நிதி தொடங்­கப்­பட்­டது.

அரி­ய­வகை நோய்­கள் உடை­ய­வர்­களில் பெரும்­பா­லா­னோ­ருக்கு மெடி­சேவ், மெடி­ஷீல்ட் லைஃப் போன்ற திட்­டங்­கள் மற்­றும் கட்டணக் கழி­வு­கள் மூலம் நிதியுதவி கிடைப்­ப­தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்துள்­ளார்.

மருத்­து­வக் கட்­ட­ணங்­க­ளைச் செலுத்த சிர­மப்­ப­டு­வோர், பொதுச் சுகா­தா­ரக் கழ­கங்­கள் மூலம் மெடி­ஃபண்ட் திட்­டத்­துக்கு விண்­ணப்­பிக்­க­லாம்.

சிறிய எண்­ணிக்­கை­யி­லான நோயா­ளி­க­ளுக்­குக் கூடு­தல் நிதி­யு­தவி தேவைப்­ப­ட­லாம். இந்­தப் பிரி­வி­னர் அதிக விலை­யு­டைய மருந்­து­களை வாங்க உதவ அரிய­வகை நோய்­க­ளுக்­கான நிதி தொடங்­கப்­பட்­ட­தாக திரு ஓங் விவ­ரித்­தார்.

"இந்த நிதி குறிப்­பிட்ட அள­வில் மட்­டும் இருப்­ப­தால், உயி­ருக்கு ஆபத்தை ஏற்­ப­டுத்­தும் அரி­ய­வகை நோய்­க­ளுக்­கான சிகிச்­சை­க­ளுக்கு நிதி­யா­த­ரவு வழங்­கப்­ப­டு­கிறது.

"நோயா­ளி­யின் ஆயுட்­காலத்தை நீட்­டிக்க அத்­த­கைய சிகிச்­சை­கள் பலன்­த­ரும் வித­மாக இருக்­கும் பட்­சத்­தில் அவற்­றுக்கு நிதி­யா­த­ரவு அளிக்­கப்­ப­டு­கிறது," என்­றார் திரு ஓங்.

அந்த நிதி மற்­றும் அதன் பயனர்­கள் குறித்து பாட்­டா­ளிக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லுயிஸ் சுவா எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு மார்ச் 22ஆம் தேதி திரு ஓங் அளித்த நாடா­ளு­மன்­றப் பதி­லில் இந்த விவ­ரங்­க­ளைப் பகிர்ந்­தார்.

ஐந்து அரி­ய­வகை நோய்­க­ளுக்­கான ஏழு மருந்­து­களை தற்­போது அந்த நிதி உள்­ள­டக்­கு­கிறது.

அந்த நிதியை நிர்­வ­கிக்­கும் கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­மனை சுகா­தார நிதி­யம், நன்­கொ­டை­க­ளைச் சார்ந்­தி­ருக்­கிறது. மூன்­றுக்கு ஒன்று எனும் விகி­தத்­தில், அந்த நன்­கொ­டை­க­ளுக்­குத் தகுந்­த­வாறு அர­சாங்­கம் நிதி­ ஆதரவு வழங்­கு­கிறது.

நன்­கொடை வழங்­கு­வோர் அளிக்­கும் தொகை­யை­விட 2.5 மடங்கு அதி­கம் வரிக்­க­ழி­வைப் பெறு­வர்.

இதற்­கி­டையே, எத்­தனை சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டம் முது­கெ­லும்­புத் தசை­நார் வலு­வி­ழப்பு நோய் (Spinal Muscular Atrophy) கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது என்­றும் அதற்கு அளிக்­கப்­படும் சிகிச்­சைக்­கான செல­வு­கள் குறித்­தும் திரு சுவா கேட்­டி­ருந்­தார்.

அதற்­குப் பதி­ல­ளித்த திரு ஓங், சிங்­கப்­பூ­ரில் தற்­போது 40 முதல் 50 பேரி­டம் அந்­நோய் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தா­கக் கூறி­னார்.

"அரி­ய­வகை நோய்­க­ளுக்­கான நிதி, தொடர்ந்து நன்­கொ­டை­களைப் பெறுவதுடன் கூடு­த­லான அரிய­வகை நோய்­கள் இதில் சேர்க்­கப்­ப­டு­வது குறித்து ஆரா­யப்­படும்," என்று திரு ஓங் சொன்­னார்.

வாழ்­நாள் முழு­வ­தும் மருந்­து­கள் தேவைப்­படும் நோயா­ளி­களுக்கு ஆத­ர­வ­ளிக்­கும் வித­மாக, போது­மான முத­லீட்டு வரு­வாயை ஈட்ட நன்­கொ­டை­களை ஈர்க்க முடி­யும்­போது, புதிய மருந்து­களை அந்த நிதி பட்­டி­ய­லி­டும் என்­றும் திரு ஓங் கூறி­னார்.