தொண்டூழியத்தைப் பேணி மேம்படுத்த மூன்று வழிகள்

துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கோடிகாட்டினார்

தொண்­டூ­ழி­யம் என்­பது கடமை உணர்­வை­யும் சக­கு­டி­மக்­களை கவ­னித்­துக்கொள்ள மக்களுக்­குள்ள பொறுப்­பு­ணர்­வை­யும் வலு­வான நிலைக்கு மேம்­ப­டுத்த உதவு­கிறது.

இத­னால் மக்­கள் பொருள்­பொ­திந்த வாழ்க்­கையை வாழ வழி கிடைக்­கிறது. சமூக கட்­ட­மைப்­பு­கள் விரி­வ­டை­ய­வும் உதவி கிடைக்­கிறது.

இருந்­தா­லும் தொண்­டூ­ழி­யம் என்­பது தங்­க­ளுக்கு நேரம் கிடைக்­கும்­போது தனிப்­பட்­ட­வர்­கள் ஏதோ ஒன்றைச் செய்­வது மட்­டு­மல்ல, அது ஒரே மக்­க­ளாக சிங்­கப்­பூ­ரர்­களை அடிப்­படை ரீதி­யில் பிர­தி­ப­லிக்­கிறது.

சிங்­கப்­பூ­ரில் நாம் கொண்­டிருக்க விரும்­பும் சமூக பாணி­யை­யும் அது பிர­தி­ப­லிக்­கிறது என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­தார்.

முத­லா­வது சிங்­கப்­பூர் தொண்­டூ­ழிய நிர்­வாக மாநாட்­டில் உரை­யாற்­றிய திரு வோங், 20 ஆண்டு­க­ளுக்கு முன் தொண்­டூழி­யத்தில் ஈடு­பட்ட சிங்­கப்­பூ­ரர்­க­ளின் எண்­ணிக்கை 10 விழுக்­கா­டு­கூட கிடை­யாது என்­றார்.

ஆனால் 2016ல் அந்த விகிதம் 35 விழுக்­காட்டை தொட்­டது என்று அவர் குறிப்­பிட்­டார்.

“இருந்­தா­லும் கொவிட்-19 கார­ண­மாக அந்த விகி­தாச்­சா­ரம் 22 விழுக்­காட்­டிற்குக் குறைந்து இருக்­கிறது. இந்­தக் குறைவு தற்­கா­லி­க­மான ஒன்­று­தான் என்று நம்­பு­வோம்.

“சிங்­கப்­பூ­ரில் தொண்­டூ­ழி­யத்­தின் இப்­போ­தைய விகி­தம் 20 ஆண்­டு­க­ளுக்கு முன் இருந்­த­தை­விட இரண்டு மடங்­குக்­கும் மேலாக கூடி­யி­ருக்­கிறது,” என்று அமைச்­சர் கூறி­னார்.

பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு மேம்­பாட்டு அமைப்பு நாடு­க­ளின் சரா­சரி அள­வு­டன் ஒப்­பி­டக்­கூ­டிய நிலை­யில் நம்­மு­டைய விகி­தாச்­சாரம் இருக்­கிறது.

இருந்­தா­லும் இதில் இன்­னும் சிறப்­பா­கச் செயல்­பட வாய்ப்­பு­கள் இருப்­ப­தாக திரு வோங் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் தொண்­டூ­ழி­யத்தை வளர்க்­க­வும் நிலை­நாட்­ட­வும் மூன்று வழி­களை துணைப் பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரர்­கள் தொண்டூழியத்­தில் ஈடு­பட அர­சாங்­கம் தொடர்ந்து ஊக்­க­மூட்­டும். ஏற்பு­டைய அமைப்­பு­கள், சமூக அமைப்­பு­க­ளு­டன் சிங்­கப்­பூ­ரர்­களை இணைக்க அது உத­வும்.

இரண்­டா­வ­தாக, தொண்­டூ­ழி­யர்­க­ளைத் தாங்­கள் ஈடு­ப­டுத்தி தக்­க­வைத்­துக் கொள்­ளும் நடை­மு­றையை நிறு­வ­னங்­கள் மேம்­படுத்த வேண்­டும் என்று துணைப் பிர­த­மர் தெரி­வித்­தார்.

நிறு­வ­னங்­கள் பொருள்­பொதிந்த தொண்­டூ­ழி­யப் பணி­களைக் கவ­ன­மாக அடை­யா­ளம் கண்டு வடி­வ­மைக்க வேண்­டும். அவற்­றுக்கு ஆத­ர­வை­யும் பயிற்­சி­யை­யும் அளிக்க வேண்­டும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

அனைத்து நிறு­வ­னங்­களும் நல்ல தொண்­டூ­ழிய நிர்­வாக நடை­மு­றை­களைக் கைக்­கொள்ள முடி­யும் என்ற துணைப் பிர­த­மர், இதைப் பொறுத்­த­வரை அர­சாங்கம் மேலும் ஆத­ரவு வழங்­கும் என்­றார்.

தொண்­டூ­ழிய துறை­யில் அமைப்­பு­கள் தங்­கள் அனு­ப­வங்­க­ளை­யும் தலை­சி­றந்த நடை­முறை­க­ளை­யும் பகிர்ந்­து­கொள்ள தோதாக அர­சாங்­கம் மேலும் பல தளங்­களை உரு­வாக்­கும் என்­றும் துணைப் பிர­த­மர் தெரி­வித்­தார்.

இந்­தக் கருத்­த­ரங்­கில் கலந்­து­கொண்ட சிண்­டா­வின் தொண்­டூழிய நிர்­வாக குழு­வின் துணைத்­த­லை­வ­ரான திரு முக­மது இர்­ஷாத் தனது அமைப்­பின் தொண்­டூ­ழிய நிர்­வாக நோக்­கங்­களைப் பகிர்ந்­து­கொண்­டார்.

“தொண்­டூ­ழி­யர்­கள் மேலும் ஆக்­கபூர்­வ­மாகச் செயல்­பட தங்­க­ளது திறன்­களை மேம்­படுத்­து­வது அவ­சி­யம். அதற்­கான பட்­ட­றை­களும் பயி­ல­ரங்­கு­களும் சிண்­டா­வால் ஏற்­பாடு செய்­யப்­படு­கின்­றன,” என்று திரு இர்­ஷாத் கூறி­னார்.

வெவ்­வேறு தரப்­பி­னரை தொண்­டூ­ழி­யர்­க­ளாக ஈர்ப்­ப­தி­லும் அதிக கவ­னம் செலுத்­தப்­பட்டு வரு­வதாக இவர் குறிப்­பிட்­டார்.

கூடு­தல் செய்தி:

கரு­ணா­நிதி துர்கா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!