கோடரியுடன் வந்த ஒருவர் கைதானார். ஸ்டாம்ஃபர்ட் ரோட்டில் நடந்த கைகலப்பை அடுத்து அவர் பிடிபட்டார்.
அந்த ஆடவர் ஸ்டாம்ஃபர்ட் ரோடு, விக்டோரியா ரோடு சந்திப்பில் ராஃபிள்ஸ் சிட்டியை நோக்கி சாலையைக் கடந்து சென்றதை யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட ஒரு காணொளி காட்டியது.
வலது கையில் கோடரியுடன் அந்த நபர், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காவல்துறை வாகனம் ஒன்றை நோக்கி நடந்து சென்றார்.
சீருடையில் இருந்த இரண்டு அதிகாரிகள், தங்கள் ஆயுதங்களை எடுத்து அந்த ஆடவரை நோக்கிக் காட்டினர்.
அதிகாரிகளை நெருங்கி வந்த அந்த ஆடவர், அவர்களுக்கு கொஞ்ச தூரம் முன்னதாக நின்று தன்னுடைய கோடரியைத் தூக்கி எறிந்துவிட்டார்.
அந்த 25 வயது ஆடவர் தொடர்ந்து கைதானதாக காவல்துறை தெரிவித்தது.
கோடரியும் கைப்பற்றப்பட்டது.
இதற்கிடையே, ஒரு கைகலப்பை அடுத்து 71 வயது ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் 29 வயது ஆடவர் புலன்விசாரரணையில் உதவி வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

