வீட்டின் சுவர் இடுக்கில் விழுந்து சிக்கிக்கொண்ட குழந்தை பலி

வீட்டின் சுவர் இடுக்கில் விழுந்து சிக்கிக்கொண்ட குழந்தை பலி

2 mins read
62bd5466-bc8a-4e4a-9417-8ec4f79fa57f
-

தன் தாயா­ரு­டன் படுக்­கை­யில் தூங்­கிக்­கொண்டு இருந்த நான்கு மாத பெண் குழந்தை, படுக்­கைக்­கும் சுவற்­றுக்­கும் இடை­யில் இருந்த ஓர் இடுக்கில் விழுந்­து­, மூச்­சுத் திணறி இறந்து­விட்­டது.

நூர் அயில்­யான் இமானி உது­மான் என்ற அந்­தக் குழந்தை, அதன் தலை கீழே இருந்த நிலை­யில் கொஞ்ச நேரத்­திற்கு அந்­த இடுக்கில் மாட்­டிக்­கொண்­டு­விட்­டது என்று தாங்­கள் கரு­து­வ­தாக சென்ற ஆண்டு ஏப்­ரல் 20ஆம் தேதி பிரேதப் பரி­சோ­த­னை­யா­ளர்­கள் அறிக்­கை­யில் தெரி­வித்­த­னர்.

குழந்தை அப்­படி சிக்­கிக்­கொண்­ட­தால் மூச்­சு­விட முடி­யா­மல் போய்­விட்­டது. ரத்த ஓட்­ட­மும் பாதிக்­கப்­பட்டு குழந்தை மர­ணம் அடைந்­து­விட்­டது.

மர­ணம் பற்றி விசாரணை நடத்­திய மரண விசா­ரணை அதி­காரி, குழந்தையின் மர­ணம் துர­திருஷ்­ட­வ­ச­மான ஒன்று என்று இம்­மா­தம் 3ஆம் தேதி தீர்ப்­பில் குறிப்­பிட்­டார்.

அந்­தக் குழந்­தை தாயாருடன் மெத்­தை­யில்­ தூங்­கி­யது. படுக்கை இருந்த இடத்­தில் இரண்டு சுவர்­கள் சந்­தித்­தன.

இடது பக்க சுவற்­றில் ஓர் இடைவெளி இருந்­தது. அது சுமார் 22 செ.மீ. அக­லம், 25 செ.மீ. ஆழ­மான ஓர் இடுக்­கு­போல் இருந்­தது. 2021 டிசம்­பர் 20ஆம் தேதி காலை சுமார் 5 மணி இருக்­கும். குழந்தை அழு­த­தைக் கேட்ட தாயார் பால் காய்ச்சி குழந்­தைக்கு கொடுத்­தார். அதன் கையி­லேயே போத்­தலை கொடுத்­­தார்.

காலை­யில் 6 மணிக்கு எழுந்­த­போது குழந்­தை­யின் கால்­கள் இடுக்­கில் இருந்து வெளியே நீட்­டிக்கொண்டு இருந்­த­தைப் பார்த்து திடுக்­கிட்டு மருத்­துவ வாக­னத்தை அழைத்­தார். குழந்தை காலை 7.45 மணிக்கு இறந்­து­விட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது.