சுற்றுச்சூழல், கலைகள் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் நியமன நாடாளுமன்ற உறுப்பினராக விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
'ஃபோரம் ஃபார் த ஃபியூச்சர்' அமைப்பைச் சேர்ந்த திருவாட்டி மதுமிதா அர்த்தநாரி; 'சாய்ல் சோஷியல்' என்ற அமைப்பை நிறுவிய திருவாட்டி ஜேடன் ஓங்; உணவு மானுடவியல் வல்லுநர் திருவாட்டி நித்யா லைலா; தேனீ வளர்ப்பாளர் திரு சேவியர் டான், நாடக நடிகரும் கலைப் போதகருமான திருவாட்டி நூர்லினா முகம்மது ஆகியோரே அந்த ஐவர்.
நாடாளுமன்றத்தில் மொத்தம் ஒன்பது நியமன உறுப்பினர்கள் இருக்க முடியும். அவர்களின் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகள்.
விண்ணப்பக் கால அவகாசம் ஏப்ரல் 19ஆம் தேதி மாலை 4.30 மணியுடன் முடிவடையும்.
நாடாளுமன்ற நாயகர் தலைமையிலான சிறப்பு தேர்வுக் குழு தகுதியுள்ள வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும்.