சிங்கப்பூர் பொருளியலை முன்னெடுத்துச் செல்ல தேசிய ஆய்வு நிறுவனம் ஆதரவு அளிக்கும்

சிங்கப்பூர் பொருளியலை முன்னெடுத்துச் செல்ல தேசிய ஆய்வு நிறுவனம் ஆதரவு அளிக்கும்

2 mins read
676f8a21-22a1-4881-9fa2-7d8e0bb6d387
-

ஆய்வு, புத்­தாக்­கம், நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்றைக் கட்­டி­யெ­ழுப்­பும் முயற்­சி­களில் சிங்­கப்­பூர் தொடர்ந்து ஈடு­பட்டு வரு­கிறது. இத­னால் பல ஆண்­டு­க­ளாக நற்­ப­லன்­கள் ஏற்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக, உயிர்­ம­ருத்­துவ அறி­வி­யல் மற்­றும் மருத்­துவ தொழில்­நுட்­பத்­தில் செய்த முத லீடு­க­ளால் சிங்­கப்­பூ­ரின் மொத்த உற்­பத்தி நான்கு விழுக்­காடு அதி­க­ரித்து, 25,000க்கும் மேற்­பட்ட வேலை­களை உரு­வாக்க ஆத­ர­வாக இருந்­துள்­ளது.

நிறு­வ­னங்­கள் மீதான முத­லீட்டு நிதி­யா­த­ர­வும் இரு­பது மடங்கு அதி­க­ரித்­துள்­ளது. இத­னால் சிங்­கப்­பூ­ரின் புதிய பசுமை தொடர்­பான தொழில்­களும் தொடர்ந்து வளர்ச்சி காணும் என எதிர்பார்க்­கப்­ப­டு­கிறது.

இதற்­கான முத­லீடு, 2011ஆம் ஆண்­டில் 500 மில்­லி­யன் வெள்­ளி­யாக இருந்­தது. 2022ல் இது 11 பில்­லி­யன் வெள்­ளிக்கு அதி கரித்­துள்­ளது.

இந்­தச் சாத­னை­களை, பிர­த­மர் அலு­வ­ல­கத்­தின்கீழ் செயல்­படும் தேசிய ஆய்வு நிறு­வ­னம் நேற்று வெளி­யிட்ட தனது பிற்­சேர்க்­கை­யில் பட்­டி­ய­லிட்­டது.

நாடா­ளு­மன்­றத்­தின் புதிய கூட்­டத் தொட­ரில் அதி­பர் ஹலிமா யாக்­கோப் தொடக்­க­ வு­ரை­யாற்­றிய பிறகு அமைச்­சு­களும் அர­சாங்க அமைப்­பு­களும் பிற்­சேர்க்கை அறிக்­கை­களை வெளி­யிட்டு வரு­கின்­றன.

கடந்த 2006ஆம் ஆண்­டில் நாட்­டின் ஆய்வு, உரு­வாக்­கத்தை மேம்­ப­டுத்தி, அவை தொடர்­பான கொள்கை, திட்­டம், உத்­தி­களை வகுப்­ப­தற்­காக தேசிய ஆய்வு நிறு­வ­னம் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

பொரு­ளி­ய­லுக்கு முக்­கி­யத்­துவம் அளிப்­பது மட்­டு­மல்­லா­மல் சிங்­கப்­பூ­ரின் சவால்­மிக்க துறை­க­ளான பொதுச் சுகா­தா­ரம், மீள்­தி­றன் வளங்­கள் ஆகி­ய­வற்றை சமா­ளிக்­க­வும் ஆய்வு நிறு­வ­னம் கைகொ­டுத்து வரு­வ­தாக அதன் தலை­வ­ரான துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் நேற்று தெரி­வித்­தார்.

கொவிட்-19 கொள்­ளை­நோயை எதிர்த்து உட­ன­டி­யா­கச் செயல்­ப­டு­வ­தற்கு உயிர்­ம­ருத்துவ அறி­வி­யல், தொற்­று­நோய் ஆகி­ய­வற்­றில் சிங்­கப்­பூ­ருக்கு இருந்த ஆற்­றல் உத­வி­யதை அவர் உதா­ர­ண­மாக சுட்­டிக்­காட்­டி­னார்.

சோத­னைச் சாலை­யில் கிரு­மியை உரு­வாக்­கிய முதல் நாடுகளில் ஒன்றான சிங்­கப்­பூர், தொற்று நோயைக் கண்­ட­றி­யும் சாத­னங்­களைத் தயா­ரித்­தது. இவை உள்­ளூ­ரி­லும் வெளி­நாடுகளி­லும் பயன்­ப­டுத்­தப்பட்­டன. உத்­தி­பூர்வ தொழில்­நுட்­ப ஆற்றலை மேலும் பெருக்கி, நல்ல வேலை­க­ளுக்­கும் வளர்ச்­சிக்­கும் புதிய வாய்ப்­பு­களை உரு­வாக்­கும் சிங்­கப்­பூ­ரின் பொரு ளியல் ­மாற்­றத்­திற்கு தேசிய ஆய்வு நிறு­வ­னம் தொடர்ந்து ஆத­ரவு அளிக்­கும் என்றார்.