புதிதாக 33 பேருக்கு விளையாட்டு உன்னத உபகாரச் சம்பளம்

புதிதாக 33 பேருக்கு விளையாட்டு உன்னத உபகாரச் சம்பளம்

2 mins read
c7822f03-d6a6-44b0-91f7-75834d5fbf95
-

கரு­ணா­நிதி துர்கா

பத்­தா­வது ஆண்டு நிறை­வைக் கொண்­டா­டும் விளை­யாட்டு உன்­னத உப­கா­ரச் சம்­ப­ளம், இவ் வாண்டு 11 விளை­யாட்­டு­க­ளைச் சேர்ந்த 33 புதிய விளை­யாட் டாளர்­களை வர­வேற்­றுள்­ளது.

அவர்­க­ளு­டன் சேர்த்து இப் போதைக்கு 105 பேர் அந்த உன்­னத உப­கா­ரச் சம்­ப­ளம் பெற்று வரு­கின்­ற­னர். கடந்த 2013ஆம் ஆண்டு அந்த உப­கா­ரச் சம்­ப­ளத் திட்­டம் தொடங்­கப்­பட்­டது முதல், இது வரை 211 பேர் அதன்­மூ­லம் பயன் அடைந்­துள்­ள­னர்.

அவர்­களில் 13 பேர் உலக சாத­னை­யா­ளர்­க­ளாக உரு வெடுத்­துள்­ள­னர்; 33 உலக வெற்றி­யா­ளர் பட்­டங்­கள் கை சேர்ந்­துள்­ளன.

தேசிய விளை­யாட்­ட­ரங்­கில் நேற்று நடந்த விழா­வில், முன் னாள், இந்­நாள், புதிய பயனாளி­கள் என 150க்கும் மேற்பட்­டோ­ரும் அவர்­தம் குடும்பத்­தி­னர், தேசிய விளை­யாட்­டுச் சங்­கங்­க­ளின் பிர­தி­நி­தி­கள், பங்­காளி அமைப்­பு­க­ளைச் சேர்ந்தவர்­கள் ஆகி­யோர் கலந்துகொண்­ட­னர்.

கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­ச­ரும் சட்ட இரண்­டாம் அமைச்­ச­ரு­மான திரு எட்­வின் டோங் நிகழ்ச்­சி­யின் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்து கொண்­டார்.

"விளை­யாட்­டா­ளர்­கள் அனை வரும் தங்­கள் விளை­யாட்­டு­களில் தீவி­ரப் பற்­றும் மிகுந்த அர்ப்பணிப்­பும் கொண்­டுள்­ள­னர். அவர்­க­ளின் கன­வு­க­ளுக்கு துணை­யாக இருக்­கும் இது போன்ற உப­கா­ரச் சம்­ப­ளத் திட்­டங்­கள் தொடர்ந்து செயல் பாட்­டில் இருக்க வேண்­டும்," என்று திரு எட்­வின் டோங் கூறி­னார்.

ஆஸ்­தி­ரே­லி­யப் பொது­வி­ருது திடல்­தடப் போட்­டி­யில்­ 200 மீட்டர் ஓட்­டப் பந்­த­யத்­தின் தகு­திச் சுற்­றில் 22.89 நொடி­களில் ஓடி முடித்து, தேசிய சாதனை புரிந்த சாந்தி பெரே­ரா­வும் விளை­யாட்டு உன்­னத உப­கா­ரச் சம்­ப­ளம் பெற்றுவ­ரும் விளை­யாட்­டா­ளர்களில் ஒரு­வர். அது­மட்­டு­மல்­லாது, ஒரே மாதத்­தில் 100 மீட்­டர் ஓட்­டத்­தில் மும்­முறை அவர் தமது சொந்த தேசிய சாத­னையை முறி­ய­டித்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

"இந்த உப­கா­ரச் சம்­ப­ளம் கிடைத்­த­தால் என்­னால் எளி­தாக ஒரு முழு­நேர விளை­யாட்­டா­ள­ராக, என் விளை­யாட்­டி­லும் லட்­சி­யத்­தி­லும் முழுக் கவ­னம் செலுத்த முடி­கிறது. இனி வரும் போட்­டி­க­ளி­லும் சிறப்­பா­கச் செயல்­பட இத்­திட்­டம் சிறந்த ஆத­ர­வாக அமை­யும்," என்­றார் திரு­வாட்டி சாந்தி. அடுத்து வரும் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் சிங்­கப்­பூ­ருக்­குப் பதக்­கங்­களை வென்று தரு­வ­தில் உறு­தி­யாக உள்­ளார் அவர்.