ஒரே நாளில் 235,000 பேர் எல்லைகளைக் கடந்தனர்

ஒரே நாளில் 235,000 பேர் எல்லைகளைக் கடந்தனர்

1 mins read
fe8a7a16-28d6-47c3-808c-9586870c422d
-

மலே­சி­யா­வு­ட­னான எல்­லை­கள் முழு­மை­யா­கத் திறக்­கப்­பட்ட பிறகு ஏரா­ள­மா­னோர் சிங்­கப்­பூரை விட்டு வெளி­யே­றி­ய­தால் புதிய சாதனை படைக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த புனித வெள்ளி நீண்ட வார­யி­றுதி விடு­மு­றையை முன்­னிட்டு ஏப்­ரல் 6ஆம் தேதி உட்­லண்ட்ஸ், துவாஸ் சோத­னைச் சாவடி வழி­யாக சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து 235,000க்கும் மேற்­பட்­டோர் வெளி­யே­றி­னர். கொள்ளை நோயி­லி­ருந்து மீண்டு வந்த சிங்­கப்­பூர் ஓராண்­டுக்கு முன்பு மலே­சி­யா­வு­ட­னான எல்லை களைத் திறந்­தது. கடந்த வியா­ழக் கிழமை மதிய நேரத்­தில் இருந்து போக்­கு­வ­ரத்து அதி­க­ரித்­தது. இரு சோத­னைச் சாவ­டி­களில் கடும் நெரி­சல் ஏற்­பட்­டது என்று சிங்­கப்­பூர் குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது. ஏப்­ரல் 6ஆம் தொடங்கி 9ஆம் தேதி வரை­யி­லான நீண்ட வார இறு­தி­யில் நிலம் வழி­யாக இரு சோத­னைச் சாவ­டி­க­ளை­யும் 1.4 மில்­லி­யன் பய­ணி­கள் கடந்து சென்­ற­தா­க­வும் அது கூறி­யது. ஏப்­ரல் 7ஆம் தேதி புனித வெள்ளி நாளா­கும். ஏப்­ரல் 5ஆம் தேதி சிங் மிங் பண்­டிகை தொடங்­கி­யது என்று ஆணை­யம் சுட்­டிக்­காட்­டி­யது.

இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு புனி­த­வெள்ளி வார இறு­தி­யில் ஒரு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­டோர் நிலச் சோத­னைச் சாவ­டி­க­ளைக் கடந்து சென்­ற­னர். தற்­போ­தைய எண்­ணிக்கை, கொள்­ளை­நோய்க்கு முந்­தைய நிலைக்­குத் திரும்­பி­யி­ருப்­ப­தைக் காட்­டு­கிறது. பய­ணி­கள் எளி­தா­கச் செல்­ல­வும் நெரி­ச­லைக் குறைக்­க­வும் பல முன்­னெச்ச சரிக்கை நட­வ­டிக்­கைளை ஆணை­யம் எடுத்­தி­ருந்­தது.