தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மன்னிப்புக் கோரிய 'ஃபேர்பிரைஸ்'

2 mins read
1af849c0-18c6-46ac-aa35-a0400a0e3b6e
-

ஆ. விஷ்ணு வர்­தினி

தெம்­ப­னி­சில் உள்ள தனது கிளை­யில் ஜஹ­பர் ஷாலி - ஃபாரா நடியா தம்­பதி எதிர்­நோக்­கிய இன­வா­தப் போக்­கி­லான சம்­ப­வம் குறித்து 'என்­டி­யுசி ஃபேர்பி­ரைஸ்' மன்­னிப்­புக் கோரி உள்­ளது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை திரு ஜஹ­ப­ரும் அவ­ரது ஐந்து வயது மக­னும் இந்­தி­யர் எனும் அடிப்­ப­டை­யில் 'ஃபேர்பி­ரைஸ்' பேரங்­கா­டி­யின் நோன்பு துறப்­ப­தற்­கான அன்­ப­ளிப்­பு­களை எடுக்­க­வி­டா­மல் தடுக்­கப்­பட்­ட­னர். சம்­ப­வம் குறித்து அதற்கு மறு­நாள் நிறு­வ­னம் 'ஃபேஸ்புக்­கில்' விளக்­க­ம­ளித்­தது.

அச்­சம்­ப­வம் விழிப்­பு­ணர்­வின்­மை­யைக் குறிப்­ப­தா­க­வும் இதனை இன­வா­த­மா­கக் கரு­தக்­கூ­டாது என்­றும் திரு ஜஹ­பர் தமிழ்­ மு­ர­சி­டம் கூறி­னார்.

அனை­வ­ரும் இதனை ஒரு படிப்­பி­னை­யா­கக் கரு­த­வேண்­டும் என்­றும் தன் குழந்­தை­க­ளுக்கு இனம் குறித்த ஆழ­மான புரி­தலை ஏற்­ப­டுத்த அது வாய்ப்பு அளித்­துள்­ளது என்­றும் ஜஹ­பர் சொன்­னார்.

வழக்­கம்­போல 'என்­டி­யுசி ஃபேர்பி­ரைஸ்' பேரங்­கா­டிக்­குத் தம் இரு மகன்­க­ளு­டன் சென்­றி­ருந்த ஜஹ­பர்-ஃபாரா, ரம­லான் மாதத்தை முன்­னிட்டு அந்­நி­று­வனம் இஸ்­லா­மி­யர்­க­ளுக்­காக வைத்­தி­ருந்த இல­வச அன்­பளிப்பு­க­ளைக் கண்­ட­னர்.

அது­கு­றித்து விவ­ரம் அறிய மக­னு­டன் அரு­கில் சென்ற ஜஹ­பரை அங்­கி­ருந்த வேற்­றின ஊழி­யர், 'அவை இந்­தி­யர்­க­ளுக்­கன்று' எனக் கூறி விரட்­டி­னார்.

"இவ்­வாண்டு என் மூத்த மகனை நோன்­பு­மு­றைக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­னோம். நாம் ஏன் விரட்­டப்­பட்­டோம்? மலாய் இனத்­தோர் மட்­டும்­தான் நோன்­பு­மு­றை­யைப் பின்­பற்­று­வார்­களா? எனத் தனது அடை­யா­ளத்­தைப் பற்றி குழம்­பிய அவ­னி­டத்­தில் அச்­சம்­ப­வம் பல கேள்­வி­களை ஏற்­ப­டுத்­தி­யது," என்­றார் ஜஹ­பர், 36.

கோபம் கொள்­ளா­மல், வயது முதிர்ந்த அந்த ஊழி­ய­ரி­டம் இனம், சம­யம் இரண்­டும் வெவ்­வேறு என்று தான் விளக்க முற்­பட்­ட­தா­க­வும் மேலி­டத்து உத்­த­ர­வையே தான் பின்­பற்­று­வ­தாக ஊழி­யர் பதி­ல­ளித்­த­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இது­கு­றித்து திரு­வாட்டி ஃபாரா நடியா தன் 'ஃபேஸ்புக்' பக்­கத்­தில் பதி­விட்­டார்.

அப்­ப­திவு பர­வி­யதை அடுத்து, 'ஃபேர்­பி­ரைஸ்' ஜஹ­ப­ரி­டம் நேர­டி­யாக மன்­னிப்­புக் கோரி­யது. ஊழி­ய­ருக்கு எச்­ச­ரிக்­கைக் கடி­தம் கொடுக்­கப்­பட்­ட­து­டன் தம்­ப­தி­யின் வீட்­டுக்கே சென்று மன்­னிப்­புக் கோரும்­படி ஊழி­யர் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­தா­க­வும் நிறு­வ­னம் சொல்­லிற்று.

ஆயி­னும், "எச்­ச­ரிக்­கைக் கடி­தத்தை நிறு­வ­னம் திரும்­பப் பெற்றுக்­கொள்­ளும்­படி வேண்­டிக்­கொண்­டேன். ஊழி­யர் மன்­னிப்­புக் கேட்­ப­தற்­கான அவ­சி­யம் இல்லை என்­றும் தெரி­வித்­துள்­ளேன்," என்­றார் ஜஹ­பர்.

மாறாக, ஃபேர்பி­ரை­சின் அந்த அன்­ப­ளிப்­பு­கள் எல்­லா­ருக்­கு­மா­ன­வை­யாக மாற்­றப்­ப­ட­வேண்­டு­மென அவர் கேட்­டுக்­கொண்­டார். அதைத் தொடர்ந்து சம்­பந்­தப்­பட்ட ஊழி­ய­ருக்குத் தக்க ஆலோ­சனை வழங்­கப்­பட்­ட­தா­க­வும் நிறு­வ­னத்­தின் இஃப்தார் அன்­ப­ளிப்­பு­கள் அனைத்து இஸ்­லா­மிய வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கும் இல­வ­சம் என அறி­விக்­கப்­பட்டுள்ளதா­க­வும் 'ஃபேர்பி­ரைஸ்' கூறி­யது.

இது­போன்ற சம்­ப­வத்தை எதிர்­கொண்­டது ஜஹ­பர்-ஃபாரா தம்­ப­திக்­குப் புதி­தல்ல. மலாய் இந்­தி­ய­ரான ஃபாரா, சிறு­வ­ய­தி­லி­ருந்து ஒரு பரத நாட்­டி­யக் கலை­ஞர். அவ­ரின் அடை­யா­ளம் குறித்த சந்­தே­கங்­கள் பல­முறை எழுந்­த­து உண்டு.

வேறு­பா­டு­க­ளைச் சகித்­துக்­கொள்­வ­தோடு நிறுத்­தி­வி­டா­மல் வேறு­பட்ட மக்­களை ஏற்­றுக்­கொள்­ளும் போக்கு சிங்­கப்­பூ­ரில் மேம்­பட வேண்­டும் என்­பது அத்­தம்­ப­தி­யின் விருப்­பம்.