பேருந்து மோதி 65 வயது சைக்கிளோட்டி மரணம்

பேருந்து மோதி 65 வயது சைக்கிளோட்டி மரணம்

1 mins read
05850a84-088e-48f0-8eff-b37edb365548
-

பாசிர் ரிஸ் வட்­டார சாலைச் சந்­திப்­பில் கடந்த திங்­கட்­கி­ழமை 'கோ அகெட் சிங்­கப்­பூர்' பேருந்து மோதி­ய­தில் 65 வயது சைக்­கி­ளோட்டி உயி­ரி­ழந்­தார்.

துப்­பு­ர­வா­ள­ரா­கப் பணி­யாற்­றிய அந்த ஆட­வர் விபத்­துக்­குப் பிறகு சுய­நி­னை­வற்ற நிலை­யில் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­டார்.

அங்கு சிகிச்சை பல­னின்றி முதியவர் மாண்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

பாசிர் ரிஸ் டிரைவ் 3க்கும் பாசிர் ரிஸ் சென்ட்­ர­லுக்­கும் இடை­யி­லான சாலைச் சந்­திப்­பில் ஏற்­பட்ட விபத்து குறித்து திங்­கட்­கி­ழமை காலை 7.20 மணி­ய­ள­வில் தக­வல் கிடைத்­த­தா­கக் காவல்­துறை கூறி­யது.

45 வயது பேருந்து ஓட்­டு­நர் விசா­ர­ணை­யில் உத­வி­வ­ரு­வ­தாக அது குறிப்­பிட்­டது.

தன் கண­வர் அன்­றா­டம் சைக்­கி­ளில் வேலைக்­குச் செல்­வது வழக்­கம் என்று மாண்­ட­வரின் மனைவி சீன­மொழி நாளே­டான சாவ்­பா­வி­டம் கூறி­னார். தொடக்கப்பள்ளி மூன்­றாம் வகுப்பு வரை மட்­டுமே பயின்ற ஆட­வர், பல்­வேறு வேலை­களில் கடி­ன­மாக உழைத்து தங்கள் மக­னைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் படிக்க வைத்­த­தாக மனைவி குறிப்­பிட்­டார்.

சம்­ப­வம் குறித்து வருத்­தம் தெரி­வித்த பேருந்து நிறு­வ­னம், பாதிக்­கப்­பட்ட குடும்­பத்­து­டன் தொடர்­பில் இருப்­ப­தா­கக் கூறி­யது. விசா­ர­ணை­யில் அதி­கா­ரி­களுக்கு முழு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தா­க­வும் அது தெரி­வித்­தது.