ஜப்பானிய ஊடக நிறுவனமான நிக்கேய் இன்கார்ப்பரேஷன், சிங்கப்பூரின் எஸ்பிஎச் மீடியா குழுமத்துடன் இணைந்து செயல்படுவது தொடர்பில் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
செய்தித்துறை நிபுணத்துவப் பரிமாற்றம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பயன்பாடு, வட்டார வாசகர் மேம்பாடு ஆகியவை தொடர்பில் ஒத்துழைக்க இரு நிறுவனங்களும் நேற்று இணக்கம் கண்டன.
செய்தித்துறையினருக்கு இடையிலான கற்றல் பயணங்கள், கூட்டு நிகழ்ச்சிகள், ஒத்துழைப்பு போன்ற நடவடிக்கைகள் வழக்கமான இடைவெளியில் மேற்கொள்ளப்பட இது வழிவகுக்கும். இரு நிறுவனங்களும் பயனடையக்கூடிய இந்நடவடிக்கைகள் இந்த ஆண்டுப் பிற்பாதியில் தொடங்கும்.
நிக்கேய் நிறுவனத்தின் 'ஸ்கௌட்ஏஷியா' எனும் ஆங்கில மொழிக்கான செயற்கை நுண்ணறிவுத் தரவுச் சேவையைப் பயன்படுத்தி, எஸ்பிஎச் அதன் மின்னிலக்கச் செய்திப் பதிப்பை ேம்படுத்தும்.
ஆசியான் வட்டார வாசகர்களை மேலும் சென்றடையும் வண்ணம் இரு நிறுவனங்களும் விற்பனை தொடர்பான கூட்டு நடவடிக்கைகளுக்குத் திட்டம் இடும் எனக் கூறப்பட்டது.

