ஊடகத்துறையில் இணைந்து பணியாற்ற எஸ்பிஎச் மீடியா-நிக்கேய் ஒப்பந்தம்

ஊடகத்துறையில் இணைந்து பணியாற்ற எஸ்பிஎச் மீடியா-நிக்கேய் ஒப்பந்தம்

1 mins read
c19734fe-9664-4977-92be-007592e93461
-

ஜப்­பா­னிய ஊடக நிறு­வ­ன­மான நிக்­கேய் இன்­கார்ப்­ப­ரே­ஷன், சிங்­கப்­பூ­ரின் எஸ்­பி­எச் மீடியா குழு­மத்­து­டன் இணைந்து செயல்­ப­டு­வது தொடர்­பில் ஒப்­பந்­தம் செய்து­கொண்­டுள்­ளது.

செய்­தித்­துறை நிபு­ணத்­து­வப் பரி­மாற்­றம், செயற்கை நுண்­ண­றி­வுத் தொழில்­நுட்­பப் பயன்­பாடு, வட்­டார வாச­கர் மேம்­பாடு ஆகி­யவை தொடர்­பில் ஒத்­து­ழைக்க இரு நிறு­வ­னங்­களும் நேற்று இணக்­கம் கண்­டன.

செய்­தித்­து­றை­யி­ன­ருக்கு இடை­யி­லான கற்­றல் பய­ணங்­கள், கூட்டு நிகழ்ச்­சி­கள், ஒத்­து­ழைப்பு போன்ற நட­வ­டிக்­கை­கள் வழக்­க­மான இடை­வெ­ளி­யில் மேற்­கொள்­ளப்­பட இது வழி­வகுக்­கும். இரு நிறு­வ­னங்­களும் பய­ன­டை­யக்­கூ­டிய இந்நட­வ­டிக்­கை­கள் இந்த ஆண்­டுப் பிற்­பாதி­யில் தொடங்­கும்.

நிக்­கேய் நிறு­வ­னத்தின் 'ஸ்கௌட்­ஏ­ஷியா' எனும் ஆங்­கி­ல­ மொ­ழிக்­கான செயற்கை நுண்­ண­றி­வுத் தர­வுச் சேவை­யைப் பயன்­ப­டுத்தி, எஸ்­பி­எச் அதன் மின்­னி­லக்­கச் செய்­திப் பதிப்பை ேம்ப­டுத்­தும்.

ஆசி­யான் வட்­டார வாச­கர்­களை மேலும் சென்­ற­டை­யும் வண்­ணம் இரு நிறு­வ­னங்­களும் விற்­பனை தொடர்­பான கூட்டு நட­வ­டிக்­கை­க­ளுக்­குத் திட்­ட­ம் இ­டும் எனக் கூறப்­பட்­டது.