வெளிநாட்டு ஊழியர் விதிமுறைகளை தளர்த்த கோரிக்கை

வெளிநாட்டு ஊழியர் விதிமுறைகளை தளர்த்த கோரிக்கை

2 mins read
67440f1d-f88d-4633-97a6-a8f730af886e
-

போட்டிமிகுந்த உலகில் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு மனிதவளப் பற்றாக்குறை பிரச்சினை

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான விதி­மு­றை­களை அர­சாங்­கம் விரை­வில் தளர்த்­தும் என்று சிங்­கப்­பூர் வர்த்­தக சம்­மே­ள­னம் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளது.

சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் போது­மான ஊழி­யர்­கள் இல்­லா­மல் நெருக்­க­டி­யைச் சந்­திக்­கின்­றன. இத­னால் இந்த விவ­கா­ரத்­தில் அர­சாங்­கம் விரைந்து நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று அது வலி­யு­றுத்­தி­யது.

முன்­களப் பணியாளர்களில் பாதிக்­கும் மேற்­பட்­டோர் தங்­க­ளுக்கு வேலைப் பளு அதி­க­ரித்­து­விட்­ட­தா­கக் கூறி­யுள்­ள­னர். இவர்­களில் மூன்­றில் ஒரு பங்­கி­னர் வேலை­யி­லி­ருந்து வில­கு­வ­தற்கு பல முறை யோசித்­ததா­க­வும் தெரி­வித்­த­னர்.

குவால்­டி­ரிக்ஸ் எனும் நிர்­வாக நிறு­வ­னம் நடத்­திய ஆய்­வில் இந்த விவ­ரங்­கள் தெரிய வந்­துள்­ளது. கடந்த 2022ஆம் ஆண்­டில் ஜூலை முதல் செப்­டம்­பர் வரை 194 பேரி­டம் அது ஆய்வு நடத்­தி­யது.

இது குறித்­துப் பேசிய சம்­மே­ள­னத்­தின் வழக்கு விவ­கார, கொள்­கைப் பிரி­வின் இயக்­கு­நர் ஆல்­பர்ட் சுய், "வர்த்­த­கங்­க­ளுக்கு நெருக்­க­டி­யான இவ்வேளையில் வர்த்­தக வாய்ப்­பு­களை கைப்­பற்­றி ­யாக வேண்­டும். உல­கத்­து­டன் போட்­டி­யிட வேண்­டும். இந்த நிலை­யில் செல­வும் மற்­றும் மனி­த­வள நெருக்­க­டி­யால் நிறு­வ­னங்­கள் பின்­தங்­கி­வி­டக் கூடாது," என்­றார்.

ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளச் செலவு பெரும் சவா­லாக இருப்­ப­தாக 75 விழுக்­காட்டு நிறு­வ­னங்­கள் கூறி­யுள்­ளன.

மாறாக 52 விழுக்­காட்டு நிறு­வ­னங்­கள் தள­வாட வச­தி­க­ளைப் பற்­றி­யும் 45 விழுக்­காட்­டு நிறுவனங்கள் அடிப்­படை அம்­சங்­கள் பற்­றி­யும் கவலை தெரி­வித்­துள்­ளன என்று சிங்­கப்­பூ­ரின் 28,000 நிறு­வ­னங்­க­ளை­யும் வர்த்­தக சபை­க­ளை­யும் பிர­தி­நி­திக்­கும் சம்­மே­ள­னம் கூறி­யது.

சிங்­கப்­பூ­ரில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்­கை­யைக் கட்­டுப்­ப­டுத்த ஒதுக்­கீடு மற்­றும் தீர்வை முறையை அர­சாங்­கம் பின்­பற்றி வரு­கிறது.

இந்த நிலை­யில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான தீர்வை உயர்த்­தப்­ப­டு­வதை தற்­கா­லி­க­மாக கொள்கை வகுப்­பா­ளர்­கள் சில ஆண்­டு­க­ளுக்கு நிறுத்தி வைப்­பார்­கள் என்­றும் வயது அடிப்­ப­டை­யி­லான எஸ்-பாஸ் சம்­பள முறை அகற்­றப்­படும் என்­றும் அதிக வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அனு­ம­திக்­கப்­படும் என்­றும் சம்­மே­ள­னம் நம்­பு­கிறது.

வரும் செப்­டம்­பர் மாதத்­தி­லி­ருந்து சில பிரி­வு­களில் வொர்க் பாஸ்­க­ளுக்­கான தீர்­வை­யும் சம்­ப­ளத்­துக்­கான குறைந்­த­பட்ச தகு­தி­யும் உயர்த்­தப்­ப­டு­வ­தைத் தொடர்ந்து சம்­மே­ள­னத்­தின் அறிக்கை வெளி­யா­கி­யுள்­ளது.

சேவைத் துறை­யில் அடிப்­படை திற­னுள்ள ஊழி­யர்­க­ளுக்­கான தீர்வை மாதம் $450லிருந்து $800 வரை­யுள்­ளது. அதி­க­பட்­ச­மாக ஒரு நிறு­வ­னத்­தின் மொத்த ஊழி­யர் அணி­யில் 35 விழுக்­காடு வரை வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலைக்கு அமர்த்­த­லாம். எஸ்-பாஸ் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான குறைந்­த­பட்ச மாதச் சம்­ப­ளம் $3,000. இந்­தச் சம்­ப­ளம் 23 வய­தி­லி­ருந்து படிப்­ப­டி­யாக அதி­க­ரித்து 45வது வயது அல்­லது அதற்கு மேற்­பட்ட வய­தில் 5,500 வெள்­ளி­யாக இருக்­கும். இதற்­கி­டையே கட்­டு­மா­னத் துறை சூடு­பி­டித்­துள்­ள­தால் சில ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் வாடகை இரண்டு மடங்கு அதி­க­ரித்­துள்­ளது.

"நிறு­வ­னங்­கள் தங்­க­ளு­டைய நட­வ­டிக்­கை­களை மின்­னி­லக்­க­ம­ய­மாக்க வேண்­டும். உள்­ளூர் ஊழி­யர்­களை வேலைக்கு அமர்த்த வேண்­டும் என்ற அர­சாங்­கத்­தின் அழைப்பை ஏற்­கி­றோம். ஆனால் நடை­மு­றை­யில் சில குறிப்­பிட்ட வேலை­க­ளைச் செய்ய சிங்­கப்­பூ­ரர்­கள் முன்­வ­ரு­வ­தில்லை," என்று திரு சுய் மேலும் தெரிவித்தார்.