ஐந்து ஊழியர்கள் கைது

ஐந்து ஊழியர்கள் கைது

1 mins read
cacad939-e4c6-4589-8d12-a1f336145293
-

குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணைய (ஐசிஏ) அதி­கா­ரி­கள் நடத்­திய திடீர் சோத­னை­யில், அனு­ம­திக்­கப்­பட்ட காலத்­தை­விட சிங்­கப்­பூ­ரில் கூடு­தல் நாள்­கள் தங்­கிய குற்­றங்­க­ளுக்­காக ஐந்து ஆட­வர்­கள் கைது செய்­யப்­பட்டு உள்­ள­னர்.

அவர்­க­ளது வருகை அனு­மதி அட்­டை­களும் வேலை அனு­ம­திச் சீட்­டும் காலா­வ­தி­யான பிற­கும் அவர்­கள் சிங்­கப்­பூ­ரில் தங்கி, தச்­சுப் பணி­யில் சட்­ட­வி­ரோ­த­மாக வேலை செய்து வந்­தது முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரிய வந்­துள்­ள­தாக 'ஐசிஏ' நேற்று வெளி­யிட்ட ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டது.

23 வய­துக்­கும் 29 வய­துக்­கும் இடைப்­பட்ட அந்த பங்­ளா­தேஷ் நாட்­ட­வர்­கள், ஏப்­ரல் 4ஆம் தேதி அதி­காலை கிம் சுவான் சாலை­யில் கைது செய்­யப் பட்­ட­னர்.

சிங்­கப்­பூ­ரில் அனு­ம­திக்­கப்­பட்ட காலத்­தை­விட கூடு­தல் நாள்­கள் தங்­கு­வதை தான் கடு­மை­யான குற்­ற­மா­கக் கரு­து­வ­தாக ஐசிஏ கூறி­யது.

"சிங்­கப்­பூ­ரின் பாது­காப்பை உறு­தி­செய்ய கடப்­பாடு கொண்­டுள்ள ஐசிஏ, குடி­நு­ழை­வுக் குற்ற நில­வ­ரத்­தைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்க உள்­நாட்டு அம­லாக்க நட­வ­டிக்­கை­க­ளைத் தொடர்ந்து மேற்­கொள்­ளும்," என்று ஆணை­யம் சொன்­னது.

அனு­ம­திக்­கப்­பட்ட காலத்­தை­விட சிங்­கப்­பூ­ரில் கூடு­தல் நாள் தங்­கிய குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால், குற்­ற­வா­ளி­க­ளுக்கு ஆறு மாதங்­கள் வரை சிறைத் தண்­ட­னை­யும் குறைந்­தது மூன்று பிரம்­ப­டி­களும் விதிக்­கப்­ப­ட­ லாம்.