'அமெரிக்காவும் சீனாவும் பதற்றத்தைத் தணிக்க வேண்டும்'

'அமெரிக்காவும் சீனாவும் பதற்றத்தைத் தணிக்க வேண்டும்'

1 mins read
2c06376c-5fef-4b36-baea-28fedcdb2877
-

அமெ­ரிக்­கா­வும் சீனா­வும் இரு­ த­ரப்பு உறவு மேலும் மோச­ம­டை­வ­தைத் தடுக்க பதற்­றத்­தைத் தணிக்­கும் நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும் என்று சிங்­கப்­பூ­ரின் மூத்த அமைச்­சர் தர்­மன் சண்­மு­க­ரத்­னம் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

அப்­ப­டிச் செய்­தால் உலகம் எதிர்­நோக்­கும் சவால்­களை இரு சக்­தி­வாய்ந்த நாடு­களும் ஒன்­றி­ணைந்து சமா­ளிக்க முடி­யும் என்று அவர் கூறி­னார்.

பரு­வ­நிலை மாற்­றம், தண்­ணீர் நெருக்­கடி போன்ற பிரச்­சி­னை­களை அவர் உதா­ர­ண­மாக சுட்­டிக்­காட்­டி­னார்.

வாஷிங்­ட­னில் நடை­பெற்ற கருத்­த­ரங்­கில் அவர் பேசி­னார். இதில் வங்கி, நிதித் துறை­க­ளின் தலை­வர்­கள், வர்த்­த­கப் பிர­மு­கர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

"அமெ­ரிக்கா, சீனா­வின் பங்கு இல்­லா­மல் பரு­வ­நிலை மாற்­றம் போன்ற பொது­வா­னப் பிரச்­சி­னை­களை நாங்­கள் தீர்க்க முடி­யாது," என்று உல­கப் பொரு­ளி­யல் கருத் தரங்கில் திரு தர்­மன் குறிப்­பிட்­டார். செய்தி இணை­யத்­த­ள­மான செமா­ஃபர் இந்­தத் தொடக்க நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.