தாயைக் கொன்ற கைதியின் மரணம் 'இயற்கையானது'

தாயைக் கொன்ற கைதியின் மரணம் 'இயற்கையானது'

1 mins read
2b823377-02cb-48e5-92a1-f72d2247f8d9
-

2012ஆம் ஆண்­டில் தனது தாயைக் கத்தியால் குத்தி, கழுத்தை அறுத்துக்கொன்று, உடலை எரிக்க முயற்சி செய்­த­தற்­காக ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்ட சுஜெய் சால­மன் சுதர்­ச­னின் மர­ணத்தில் சூது இல்லை என்று மரண விசாரணை அறிக்கை தெரி­வித்­தது.

கடந்த 2022ஆம் ஆண்டு செப்­டம்­பர் 8ஆம் தேதி சிறைத் தண்­ட­னையை அனு­ப­வித்து வந்த சுஜெய் சால­மன் சுதர்­ச­னுக்கு ரத்­தத்தில் நச்சுத்தன்மை கார­ண­மாக உடல் உறுப்­பு­கள் செய­லி­ழந்­தன என்று மரண விசா­ரணை அதி­காரி ஆடம் நக்­கோடா 2023 மார்ச் 30ஆம் தேதி அறிக்­கை­யில் தெரி­வித்­தி­ருந்­தார். சுஜெய்க்கு ஏற்­கெ­னவே மனக்­கோ­ளாறு இருந்­தது, ஊட்­டச்­சத்து பி-12 குறை­பாடு, உணர்­வுப் பாதிப்பு, உடல் ஒருங்­கி­ணைந்து செயல்­ப­டா­தது போன்றவற்­றா­லும் அவர் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தார்.